search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிப்ரான் வைபோதா"

    • விமல் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான்.
    • அண்மையில் ரிலீஸ் ஆன குரங்கு பெடல் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

    விமல் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். முதல் படத்திலேயே சிறப்பாக இசையமைத்த ஜிப்ரானுக்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தன. இதையடுத்து வத்திக்குச்சி, திருமணம் எனும் நிக்காஹ், குட்டி புலி, அமர காவியம், உத்தம வில்லன், பாபநாசம், அறம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், துணிவு என 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

    தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஜிப்ரான், அண்மையில் ரிலீஸ் ஆன குரங்கு பெடல் படத்துக்கும் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் வெளியிட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், தான் இஸ்லாம் மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறிய ஜிப்ரான், அதோடு தன் பெயரையும் மாற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுவரை தன்னுடைய படங்களில் ஜிப்ரான் என்கிற பெயரை மட்டும் பயன்படுத்தி வந்த அவர், குரங்கு பெடல் படத்தில் ஜிப்ரான் வைபோதா என தன்னுடைய புது பெயரை போட்டிருந்தார். பெயர் மாற்றம் குறித்தும் அந்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் ஜிப்ரான்.

    குரங்கு பெடல் படம் எனக்கு மனதுக்கு நெருக்கமான படமாக இருந்தது. அதனால் இந்த படத்தில் இருந்து அப்பா பெயரையும் என்னுடைய பெயருடன் சேர்த்துவிடலாம் என முடிவு செய்தேன். என்னுடைய தந்தை பெயர் கணேஷ் பாலாஜி வைபோதா. வைபோதா என்றால் விழித்தெழுதல் என பொருள். வாகை சூடவா படம் நான் பிடிச்சு பண்ண படம், அதேபோன்ற ஒரு உணர்வோடு குரங்கு பெடல் படமும் இசையமைத்தேன். அதனால் இப்படத்தில் இருந்து என்னுடைய புது பெயரை பயன்படுத்த முடிவு செய்தேன். இனி நான் பணியாற்றும் படங்களிலும் ஜிப்ரான் வைபோதா என்றே பயன்படுத்த உள்ளேன் என அவர் கூறி இருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×