search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள் பிரச்சனை"

    • போதைப்பொருள் பிரச்சனை பஞ்சாபில் இன்று கூட இருந்து வருகிறது. அது அதிகரித்து கொண்டிருக்கிறது.
    • அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    ராகுல் காந்தி இன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா காங்கிரஸ் வேட்பாளர் அமரிந்தர் சிங்கை ஆதரித்து தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசினார்.

    அப்போது ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    போதைப்பொருள் பிரச்சனை பஞ்சாபில் இன்று கூட இருந்து வருகிறது. அது அதிகரித்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பஞ்சாப் முழு அதிகாரம் மற்றும் ஆக்ரோசத்துடன் போதைப்பொருளுக்கு எதிராக போராட வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக நேற்று மல்லிகார்ஜூன கார்கே, "பஞ்சாப் மாநிலத்தின் எதிர்காலத்திற்கு போதைப்பொருள் பிரச்சனை மிகப்பெரிய சவாலாகியுள்ளது. நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை மோசமடைந்து வருகிறது. போதைக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் நிலைத்தை விற்று, தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வேலை வாய்ப்புகள் கிடைக்காததால் ஒவ்வொருவரும் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" எனக் கூறியிருந்தார்.

    காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைமையினா ஆட்சி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    ×