search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமாஜவாடி கட்சி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணிப்பூரி தொகுதியில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் பாஜக வேட்பாளரை விட 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற எம்.பியாக செல்ல உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) நடைபெற்ற நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கருத்துக்கணிப்புகளை முறியடித்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு மிக அருகில் வந்துள்ளது.

    முக்கியமாக இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் கைகள் ஓங்கியுள்ளது. மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளை இந்தியா கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி கைப்பற்றியுள்ளது. 6 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

    உத்தர பிரதேசத்தில் பாஜகவின் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக வந்துள்ள இந்த தேர்தல் முடிவுகளுக்கு முக்கிய காரணாமாக அகிலேஷ் யாதவ் உள்ளார். முக்கியமாக இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவுடன் அவரது குடும்பத்திலிருந்து 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கன்னோஜ் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவ் வெற்றிபெற்றுள்ளார்.

    மணிப்பூரி தொகுதியில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் பாஜக வேட்பாளரை விட 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அகிலேஷ் யாதவின் உறவினர்களான அக்ஷய் யாதவ் அயோத்தி ராமர் கோவில் உள்ள பிரோசாபாத் தொகுதியிலும், தர்மேந்திர யாதவ் ஆசாம்கர் தொகுதியிலும், ஆதித்யா யாதவ் பதவுன் தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற எம்.பியாக செல்ல உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

    இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், " இந்திய கூட்டணியின் வெற்றி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட, சுரண்டப்பட்ட தலித்-பகுஜன் மக்களின் நம்பிக்கையின் வெற்றியாகும்.

    ஒடுக்கப்பட்டோர், உயர் சாதியினரிடையே பிற்படுத்தப்பட்டோர், சமத்துவம், மரியாதை, சுயமரியாதை, கண்ணியமான வாழ்க்கை, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான உரிமையை வழங்கும் அரசியலமைப்பைக் காப்பாற்ற தோளோடு தோள் நின்ற மக்களின் வெற்றி இது" என்று தெரிவித்துள்ளார்.  

    ×