search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொசு மனிதன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கையை மொய்க்கும் கொசுக்கள் கூட்டம் கண் இமைக்கும் நேரத்தில் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கிறது.
    • வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் வித்தியாசமான கருத்துக்களையும் பெற்று வருகிறது.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கோ, ஆபரேசனின்போது ரத்தம் தேவைப்படுபவர்களுக்கோ ரத்த தானம் வழங்குவது இயல்பு. மருத்துவ வளர்ச்சியையும் தாண்டி இந்த ரத்த தானம் ஒரு மனிதாபிமான உதவியாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் உயிரியலாளர் ஒருவர் கொசுக்களுக்கு தன் மன விருப்பத்தின்படி ரத்ததானம் அளிப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல உயிரியலாளர் பெரன் ரோஸ். கொசுக்களை குறித்தும் அதனின் இனப்பெருக்கம், ஆயுட்காலம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி செய்கிறார். இதற்காக ஆய்வகம் ஒன்றை அமைத்து கொசுக்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறார். இதனால் அவரை 'கொசு மனிதன்' எனவும் செல்லமாக அழைக்கிறார்கள். இந்தநிலையில் கொசுக்களின் உணவுக்காக அவர் தன் கையையே நீட்டி ரத்தத்தை தானமாக கொடுக்கிறார்.

    அவரின் கையை மொய்க்கும் கொசுக்கள் கூட்டம் கண் இமைக்கும் நேரத்தில் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கிறது. இதுதொடர்பான வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் வித்தியாசமான கருத்துக்களையும் பெற்று வருகிறது.


    ×