என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூட்டுறவு நிறுவனங்கள்"
- கூட்டுறவு அங்காடியில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவதை சேவையாக செய்து வருகிறது.
- ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டை, காமதேனு கூட்டுறவு அங்காடியில் நேற்று, கூட்டுறவுத் துறையின் மூலம் 'கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையை, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பல்வேறு வகையில் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறது. தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையிலும் ஈடுபட்டிருக்கிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பணி செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசு ஆகியவை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக எளிய முறையில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 வகையான தொகுப்புகள் பொதுமக்கள் விற்பனைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அங்காடியில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவதை சேவையாக செய்து வருகிறது.
மக்களுடைய நம்பிக்கையை பெற்று தரமான பொருட்களை குறைந்த விலையில் தரும் நிறுவனம்தான் கூட்டுறவு சங்கம். தற்போது புதிதாக அதிரசம், முறுக்கு செய்யும் தொகுப்பு ரூ.190-க்கு அளிக்கின்றனர்.
மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பிரீமியம் மற்றும் எலைட் என 2 வகையாக வழங்கப்படுகிறது. அதில் பிரீமியம் ரூ.199-க்கும், எலைட் ரூ.299-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சிறிய குடும்பத்தினரும் பெரிய அளவில் சேமிக்கும் தொகுப்பாக அளித்து வருகின்றோம். இது குடும்ப தலைவிகளிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 மையங்களில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விற்பனை ரூ.20 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
- கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 வருடங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
- முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகின்றன.
சென்னை:
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு, கல்வி மிகவும் அவசியமாகும். அவ்வாறு கல்லூரி கல்வி பயிலும் மாணவர்களுக்கு குடும்ப வருமானம் ஒரு தடையாக இருக்க கூடாது என கருதி, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுபடி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாணவர்களின் புத்தக கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம், டியூஷன் கட்டணம் போன்று பல்வேறு கல்வி கட்டணங்களை செலுத்த ஏதுவாக ரூ. 1 லட்சமாக வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 வருடங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இக்கல்விக் கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 10% ஆகும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் அங்ககீகரிக்கப்பட்ட பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மட்டுமின்றி, முதுகலைப் பட்டப் படிப்புக்கும், தொழில்முறை படிப்புகளுக்கும் (professional courses) கூட்டுறவு நிறுவனங்கள் கல்விக் கடன் வழங்குகின்றன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) சிறுபான்மையின மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக் கடன் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நிறுவனங்களை மாணவர்கள் அணுகி, உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து, கல்விக் கடனை பெற்று மாணவர்கள் தங்களின் கல்விக் கனவை நனவாக்கிக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்