search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா காங்கிரஸ்"

    • பிஆர்எஸ் கட்சி எம்எல்சி-க்கள் ஆறு பேர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
    • இதற்கு முன்னதாக ஆறு எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகு இரண்டு முறை சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தார். 3-வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவேன் என சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார்.

    தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே பிஆர்எஸ் கட்சியில் இருந்து முக்கியமான தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கியது.

    தேர்தல் முடிந்த பிறகு ஆறு எம்.எல்.ஏ.-க்கள் பிஆர்எஸ் கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு ஆறு எம்.எல்.சி.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ரேவந்த் ரெட்டி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

    இந்த நிலையில் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ கே.டி. ராமராவ் ராகுல் காந்தியை சாடியுள்ளார்.

    இது தொடர்பாக பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ. கே.டி. ராமராவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதில் கூறியிருப்பவதாவது:-

    பிஆர்எஸ் எம்.பி. கேசவ ராவ் ராஜினாமா செய்தபின், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதை நான் வரவேற்கிறேன்.

    கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் சார்பில் லோக்சபாவில் போட்டியிட்ட பிஆர்எஸ் எம்எல்ஏ பற்றி?

    காங்கிரஸ் கட்சிக்கு மாறிய ஆறு பிஆர்எஸ் எம்.எல்.ஏ.க்கள் பற்றி?

    ராகுல் காந்தி, இப்படியா நீங்கள் அரசியலமைப்பை நிலைநாட்டப் போகிறீர்கள்?

    பிஆர்எஸ் எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்க உங்களால் முடியவில்லை என்றால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின்படி 10 திருத்தங்களைச் செய்ய நீங்கள் உறுதி கூறியதை நாடு எப்படி நம்பும்?

    ×