search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற துணை சபாநாயகர்"

    • மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • நீட் தேர்வு முறைகேடு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆகஸ்டு 12-ந் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

    முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 23-ந் தேதி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாராளுமன்ற கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறுவதற்காக மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத் துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

    அதன்படி இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, கிரன் ரிஜிஜூ, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் துணை சபாநாயகர் பதவியை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும் நீட் விவகாரத்தையும் காங்கிரஸ் எழுப்பி உள்ளது.

    நீட் தேர்வு முறைகேடு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தில் கேட்டுக் கொண்டன.

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை தி.மு.க. வலியுறுத்தியது.

    பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் ஆந்திராவுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் அனைத்து கட்சி கூட்டத்தில் வற்புறுத்தின.

    ×