search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிள்ளை வரம்"

    • இந்த ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.

    ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்கின்றன புராணங்கள். ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம்தான். இந்த ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

    பொதுவாக ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.

    இது அம்பாளுக்குரிய திருநாளாகும். இந்த நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.

    அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். ஆனால் இதில் வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரமாகும். அன்னை உளம் மகிழ்ந்து அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம் ஆகும்.

    இந்த ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும் என்பது நம்பிக்கை.

    ×