search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமீபா உயிரிழப்பு"

    • தற்போது ​​4 பேர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபிக் மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும்போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் அமீபா, மூக்கின் வழியாக மனிதனின் உட லுக்குள் சென்று மூளையை தாக்கும் இந்த அரியவகை நோய் உயிர்ப்பலி வாங்கி வருகிறது.

    இந்நிலையில் திருவனந்தபுரத்தில் மேலும் 4 பேர் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம் கன்னரவிளையை சேர்ந்த அகில் (26) என்பவர் கடந்த ஜூலை 23 அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு ஆளானார்.

    அகில் தனது நண்பர்கள் அனிஷ் (26), அச்சு (25), ஹரிஷ் (27), தனுஷ் (26) ஆகியோருடன் குளத்தில் குளித்தபோது அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 3 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 4 பேர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4-வது நபருக்கும் அறிகுறிகள் உள்ளது. ஆனால் இன்னும் சோதனை முடிவுகள் வரவில்லை.

    நிலைமையின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு, சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், மாநில அதிவிரைவு குழு கூட்டத்தை கூட்டினார் (RRT) கூட்டத்தை கூட்டினார்.

    தேங்கி நிற்கும் நீர்நிலைகளில், குறிப்பாக பாசிகள் வளர்ந்துள்ள நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்குமாறு எச்சரித்த அமைச்சர், குளிக்கும்போது நாசிக்குள் தண்ணீர் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.

    மேலும் நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார்.

    இந்நிலையில் தீவிர தலைவலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அகில், உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

    சுகாதாரத் துறையினர், நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிய, பரிசோதனைக்காக தண்ணீர் மாதிரிகளை சேகரித்து நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    ×