search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கின் கேர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துர்நாற்றத்தை கட்டுப்படுத்த மூக்கில் க்ளிப் மாட்டி உள்ளார்.
    • இது எனக்கு வேலை செய்தது, என் தோல் உதிர்வதை நிறுத்திவிட்டது என்று டிபோரா பெய்க்ஸோடா தெரிவித்துள்ளார்.

    பிரேசிலை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டிபோரா பெய்க்ஸோடா. இவர் வயதாவதை தடுப்பதற்கான சரும பராமரிப்பு (Skin care) எனக்கூறி தனது மலத்தை முகத்தில் பூசிக்கொண்டு வீடியோ பதிவிட்டுள்ளது பேசு பொருளாகி உள்ளது.

    அந்த வீடியோவில் அவர் தனது மலத்தை முகத்தில் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இன்ஸ்டாகிராமில் 6.58 லட்சத்திற்கும் அதிக ஃபாலோவர்களைக் கொண்ட பெய்க்ஸோடா, தனது மலத்தை வழக்கமான ஃபேஸ் மாஸ்க் போல முகத்தில் தடவிக் கொள்கிறார்.

    துர்நாற்றத்தை கட்டுப்படுத்த மூக்கில் க்ளிப் மாட்டி உள்ளார். பின்னர் இந்த ஃபேஸ் மாஸ்க்கை கழுவுகிறார். அதன் பின்னர் அவர் சருமத்தை காட்டுவது போல் இந்த வீடியோ முடிகிறது. இது எனக்கு வேலை செய்தது, என் தோல் உதிர்வதை நிறுத்திவிட்டது என்று டிபோரா பெய்க்ஸோடா தெரிவித்துள்ளார்.

    வழக்கத்திற்கு மாறான இந்த அழகு சிகிச்சையை விமர்சித்த மருத்துவ நிபுணர்கள், இவ்வாறு செய்வதால் நன்மைகளை விட, உடல்நல அபாயங்கள் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்தனர்.

    லண்டனில் உள்ள கடோகன் கிளினிக்கின் ஆலோசகரும், சரும மருத்துவரான டாக்டர். சோஃபி மோமன் கூறுகையில், "அனைத்து தோல் பராமரிப்பு போக்குகளிலும், இது நான் கண்ட விசித்திரமான ஒன்றாகும். மலத்தை ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை பயக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை," என்று தெரிவித்தார்.

    டிபோரா பெய்க்ஸோடா ஏற்கனவே தனது மாதவிடாய் ரத்தத்தை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தி இருந்தார். தற்போது புதுவித யோசனையுடன் வந்துள்ள இவர் இதனால் தனது சருமத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    ×