search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வான் டி சாண்ட்சுல்ப்"

    • அல்காரஸ் மற்றும் வான் டி சாண்ட்சுல்ப் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்.
    • இதில் முதல் செட்டை (6-1) என்ற கணக்கில் எளிதாக வான் டி சாண்ட்சுல்ப் கைப்பற்றினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    தர வரிசையில் 74-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தின் வான்டி சான்ட்ஸ்சுல்பிடம் 6-1, 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் அல்காரஸ் தோற்று வெளியேறினார்.

    4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள முன்னணி வீரரான அல்காரஸ், 2022-ம் ஆண்டு அமெரிக்க ஓபனை வென்றிருந்தார். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபனில் அரை இறுதியில் தோற்று இருந்தார். இந்த ஆண்டு 2-வது சுற்றிலேயே நடையை கட்டினார்.

    மற்றொரு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீரரான ரஷியாவின் மெட்வதேவ்-ஹங்கேரியின் மரோசன் ஆகியோர் மோதினர்.

    இதில் மெட்வதேவ் 6-3, 6-2, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    அதேபோல் டாமிபால் (அமெரிக்கா), டான் எவர்ஸ் (இங்கிலாந்து), மென்ஷிக் (செக் குடியரசு) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மெக்சிகோவின் ஜராசுவாலை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    4-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் ரைபகினா காயம் காரணமாக 2-வது சுற்றில் இருந்து விலகினார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போண்ணா-எப்டன் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-3, 7-5 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராபின் ஹாஸ்-சாண்டர் அரேண்ட்ஸ் ஜோடியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

    ×