search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் அணி"

    • முதல் கால் இறுதியில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்- மணிப்பூர் அணிகள் மோதின.
    • இந்த ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்ததால் ஷுட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப் , உத்தரபிரதேம் , ஒடிசா, மராட்டியம், அரி யானா, மணிப்பூர் ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கிய முதல் கால் இறுதியில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்- மணிப்பூர் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. பஞ்சாப் அணியில் ரவ்நீத் சிங் 2 கோலும் (24 மற்றும் 59-வது நிமிடம்), மனீந்தர் சிங் (18), ஒரு கோலும் அடித்தனர். மணிப்பூர் அணிக்காக சிரில்லுகன் தொடர்ந்து 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் (14, 36 மற்றும் 51-வது நிமிடம்) சாதனை புரிந்தார்.

    ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் மணிப்பூர் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. பஞ்சாப் அணி வெளியேறியது.

    இன்று நடைபெறும் மற்ற கால் இறுதி ஆட்டத்தில் அரியானா-மராட்டியம், தமிழ்நாடு-உத்தரபிரதேசம், கர்நாடகா-ஒடிசா அணிகள் மோதுகின்றன.

    ×