search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதித் நாராயணன்"

    • உதித் நாராயண், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஒடியா, நேபாளி ஆகிய மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
    • காதலன் படத்தில் 'காதலிக்கும் பெண்ணின்' பாடல் மூலம் தமிழில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.

    இந்தியாவின் பிரபல பாடகர்களுள் ஒருவராக விளங்குபவர், உதித் நாராயன். 90ஸ் மற்றும் அதற்கு பிந்தைய கால கட்டங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். பிரபல பின்னணி பாடகரான உதித் நாராயண், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஒடியா, நேபாளி ஆகிய மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

    நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள உதித் நாராயண், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதலன் படத்தில் 'காதலிக்கும் பெண்ணின்' பாடல் மூலம் தமிழில் பின்னணி பாடகராக அறிமுகமானார். பின்னர் மிஸ்டர் ரோமியோ படத்தின் 'ரோமியோ ஆட்டம் போட்டால்', ரட்சகன் படத்தில் 'சோனியா சோனியா', ரன் படத்தில் 'காதல் பிசாசே', கில்லி படத்தில் 'கொக்கரக்கொ', யாரடி நீ மோகினி படத்தில் 'எங்கேயோ பார்த்த மயக்கம்', மதராசப்பட்டினம் படத்தில் 'வாம்மா துரையம்மா', குருவி படத்தில் 'தேன் தேன்', படிக்காதவன் படத்தில் 'ராங்கி ரங்கம்மா' உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

    இந்நிலையில் பல பாடகர்கள், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இணை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அப்படி, உதித் நாராயணும் உலகளவில் பல நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். அப்படி, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த நிகழ்ச்சியில் உதித் நாராயண், டிப் பார்சா பானி என்ற பாடலை மேடையில் பாடிக்கொண்டிருந்தார். மேடையின் அருகே இருக்கும் ரசிகர்கள், மேடை மேல் நிற்கும் பிரபலங்கள் அல்லது பாடகர்களிடம் செல்பி கேட்பது வழக்கம். அது போல, உதித்திடமும், ஒரு ரசிகை, செல்ஃபி கேட்டு அருகே வந்தார். அப்போது செல்பி எடுத்துக்கொண்டிருந்த அந்த ரசிகை உதித்திற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

    இதை எதிர்பார்க்காத உதித், அதிர்ச்சியாவார் என்று பார்த்தால், குஷியாக, தனது வாயுடன் வாய் வைத்து அந்த ரசிகைக்கு முத்தம் கொடுத்து விட்டார். இதைப்பார்த்து அங்கிருந்த ரசிகர்கள் கத்தி உற்சாகப்படுத்தினர். அந்த பெண்ணும் சிரித்துக்கொண்டே சென்று விட்டார். அந்த ரசிகை மட்டுமல்லாமல் பல ரசிகைகளுக்கு அவர் முத்தமிட்டார்.

    இந்த வீடியோ சில மணி நேரத்தில் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, தற்போது ஒரு பெரிய விவாதமே நடைப்பெற்று வருகிறது. உதித் நாராயண் போன்ற ஒரு சீனியர் பாடகரிடம் இது போன்ற ஒரு செயலை எதிர்பார்க்கவில்லை எனவும், உதித் நாராயண் தனது எல்லையை மீறிவிட்டார் எனவும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பத்திற்கு உதித் நாராயண் சார்பில் இருந்து எந்த விதமான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. 

    ×