search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லீச்"

    • இந்தப் படத்தை எஸ்.எம். ராஜன் எழுதி இயக்கியிருக்கிறார்.
    • இந்தப் படத்திற்கு கிரண் ஜோஸ் இசையமைத்துள்ளார்.

    ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'லீச் 'திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தை எஸ்.எம். ராஜன் எழுதி இயக்கியிருக்கிறார்.

    இந்தப் படத்தை புக் ஆஃப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார். அருண் டி சசி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை -கிரண் ஜோஸ், படத்தொகுப்பு பணிகளை ஆல்வின் டாமி மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் பாடல்களை ரஃபீக் அஹமத், விநாயக் சசிகுமார், அனூப் ரத்னா எழுத பாடகர்கள் ஹரிச்சரன், கீர்த்தனா மற்றும் ஸ்மிதா பாடியள்ளனர்.

    லீச் திரைப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை ஜாலி டேவிசன் சி.ஜே. மேற்கொண்டுள்ளார். நடனம் -ஷெரிப் மாஸ்டர், ஷிபு கவனிக்க, சண்டைப் பயிற்சியை டேஞ்சர் மணி வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ராஜூ கோவிலகம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தை எஸ்.எஃப்.சி. ஆர்ட்ஸ் வெளியிடுகிறது.

    இந்தப் படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு பேசும் போது, "இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களை கேட்போம் ரசிப்போம் கேட்கிறபோதும் ரசிக்கும் போதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த மேடையில் அவர் பாடல்களை நிஜாம் பாடிய போது பதற்றமாக இருந்தது .ஏனென்றால் அந்த அளவுக்கு காப்பிரைட் விஷயம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்.

    அந்தப் பாடலைப் பாடும் போது ஒரு ஆத்ம திருப்தி, மகிழ்ச்சி கிடைக்கும். நீங்கள் கேட்பதற்கு மட்டும் தானா பாட்டு போடுகிறீர்கள்? அதை நாங்கள் பாட வேண்டாமா? இல்லையென்றால் சொல்லிவிடுங்கள் என் பாட்டை யாரும் பாட வேண்டாம் என்று. படத்தில் இடம்பெறுவது, ஸ்டார் ஓட்டல்களில், நட்சத்திர விடுதிகளில் பாடப்படுகிறது என்றால் அதற்காக காப்பிரைட் தொகை வாங்கிக் கொள்ளலாம்.

    இங்கே அருமையாக நிஜாம் பாடினார். அவரது திறமை வெளிப்படுத்துவதற்கு இளையராஜா பயன்படுகிறார். அது ஒரு பாக்கியம் என்றே நினைக்க வேண்டும். ஆரம்பத்தில் எல்லா திரைப்படப் பாடல்களும் கிராமியப் பாடல்கள், கும்மிப் பாடல்களை அடிப்படையாக வைத்து வெற்றி பெற்றன. பிறகு தான் தங்களது இசையை உள்ளே கொண்டு வருவார்கள்.

    இதில் படக்குழுவினர் முழுக்க முழுக்க கேரளாவில் இருந்து வந்துள்ளார்கள். கேரளாவில் இருந்து வருபவர்கள் அந்த மலையாளம் கலந்த தமிழில் பேசியே புரிய வைத்து விடுவார்கள். ஆனால் நாம் தமிழ் கலந்த மலையாளம் பேசி அவர்களிடம் புரிய வைக்க முடியாது. இன்னொரு மொழி தெரிவது பிழையில்லை. இங்கு இவ்வளவு பேர் மத்தியில அவர்கள் மலையாளத்தில் பேசியே புரியவைத்தார்கள் அல்லவா? அப்படி நம்மால் முடியாது. குறிப்பாக என்னால் முடியாது. தமிழ் சினிமாவுக்கு மொழி பிரச்சினை இல்லை. நாம் அனைவரையும் அரவணைப்போம்," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×