என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 96844
நீங்கள் தேடியது "மீடியாடெக்"
மீடியாடெக் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் சிப்செட் அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
மீடியாடெக் நிறுவனம் தனது புதிய பிளாக்ஷிப் பிராசஸரை அறிமுகம் செய்தது. டிமென்சிட்டி 9000 என அழைக்கப்படும் புது சிப்செட் டி.எஸ்.எம்.சி.-யின் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பிராசஸர் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
மேலும் ஏ.ஆர்.எம். கார்டெக்ஸ்- எக்ஸ்2, ஏ710 மற்றும் ஏ510 சி.பி.யு.-க்களை பயன்படுத்தி இருக்கும் முதல் பிராசஸரும் இது தான். இந்த பிராசஸருடன் மாலி ஜி710 ஜி.பி.யு. வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எல்.பி. டி.டி.ஆர்.5எக்ஸ் ரேம் கொண்ட உலகின் முதல் பிராசஸரும் இது தான். இது அதிகபட்சம் 7500 எம்.பி.பி.எஸ். வேகம் மற்றும் ப்ளூடூத் 5.3 வசதி கொண்டிருக்கிறது.
இந்த சிப்செட்டில் 1 எக்ஸ் ஏ.ஆர்.எம். கார்டெக்ஸ் எக்ஸ்2 சி.பி.யு., 3 எக்ஸ் கார்டெக்ஸ் ஏ 710 சிபியு மற்றும் 4 எக்ஸ் கார்டெக்ஸ் ஏ510 சி.பி.யு. உள்ளது. இது தற்போது இருக்கும் ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப் பிராசஸர்களைவிட 35 சதவீதம் சக்திவாய்ந்தது ஆகும். மேலும் இது 37 சதவீதம் சிறப்பான பேட்டரி திறன் வழங்குகிறது.
இந்த பிராசஸர் 320 எம்.பி. பிரைமரி கேமராவுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது. மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்கள் 2022 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
மீடியாடெக் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சிப்களை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது. #Mediatek
சீனாவில் நடைபெற்ற சைனா மொபைல் சர்வதேச கூட்டணி கருத்தரங்கில் மீடியாடெக் நிறுவனம் தனது முதல் 5ஜி சிப்செட்டை அறிமுகம் செய்தது. மீடியாடெக் நிறுவனத்தின் முதல் 5ஜி சிப்செட் ஹீலியோ M70 என அழைக்கப்படுகிறது.
மீடியாடெக் ஹீலியோ M70 சிப்செட் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு கொண்டு வரயிருப்பதாக மீடியாடெக் தெரிவித்துள்ளது. இவற்றின் விநியோகம் அடுத்த ஆண்டு வாக்கில் துவங்கும் என தெரிவித்துள்ளது. உலகின் முதல் 5ஜி மல்டி-மோட் சிப்செட்களில் ஹீலியோ M70 ஒன்றாக இருக்கிறது.
5ஜி சேவையில் மீடியாடெக் அதிகம் கவனம் செலுத்த இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சிப்செட்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மீடியாடெக் தெரிவித்துள்ளது. எனினும், சரியான தேதி அறிவிக்கப்படவில்லை.
3ஜி மற்றும் 4ஜி சாதனங்களில் மீடியாடெக் சிப்களை வழங்க மீடியாடெக் நிறுவனம் கைஓ.எஸ். டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. கைஓ.எஸ். இயங்குதளம் மீடியாடெக் 3ஜி MT6572 மற்றும் மீடியாடெக் MT6731 உள்ளிட்டவற்றில் இயங்கும். இது மொபைல் போன்களில் டூயல் 4ஜி சிம் பயன்படுத்த வழி செய்யும்.
இந்த சிப்செட் கொண்டு இயங்கும் முதற்கட்ட சாதனங்கள் இந்த ஆண்டின இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு முதல் மீடியாடெக் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் ஆலைகள் இயங்கி வருகின்றன.
மீடியாடெக் மற்றும் கை ஓ.எஸ். இணைந்து மலிவு விலையில் 3ஜி / 4ஜி ஸ்மார்ட் ஃபீச்சர்போன்களை உருவாக்க ஒன்றிணைந்து இருக்கின்றன. #JioPhone #MediaTek
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகளவு ஸ்மார்ட் ஃபீச்சர் போன்களை உற்பத்தி செய்யும் நோக்கில் மீடியாடெக் மற்றும் கை ஓ.எஸ். டெக்னாலஜீஸ் நிறுவனங்கள் ஒன்றிணைந்து இருக்கின்றன. கை ஓ.எஸ். டெக்னாலஜீஸ் நிறுவனம் ஜியோபோனிற்கு கை ஓ.எஸ். இயங்குதளத்தை வழங்கி வருகிறது.
இதுகுறித்து இருநிறுவனங்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஸ்மார்ட் ஃபீச்சர் போன் சாதனங்களில் 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பத்தை இயங்க வைக்கும் நோக்கில் புதிதாக மீடியாடெக் சிப்செட்களை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் படி கை ஓ.எஸ். இயங்குதளம் இனி 3G MT6572 மற்றும் MT6731 தளங்களில் இயங்கும்ய இத்துடன் டூயல் 4ஜி சிம் கார்டுகளை சப்போர்ட் செய்யும் புதிய தளம் ஒன்று உருவாக்கப்பட இருக்கின்றன. கை ஓ.எஸ். சார்ந்த MT6572 மற்றும் MT6731 3ஜி/4ஜி சிப்செட்களை கொண்ட முதல் ஸ்மார்ட் ஃபீச்சர் போன்கள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு சமயத்தில் அறிமுகமாகிறது.
உலகம் முழுக்க சுமார் 100 நாடுகளில் இதுவரை எட்டு கோடி சாதனங்களை விற்பனை செய்திருப்பதாக கை ஓ.எஸ். தெரிவித்துள்ளது. இந்த இயங்குதளம் HTML5 பிளாட்ஃபார்ம் மற்றும் இதர இணைய தொழில்நுட்பங்களை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது 3ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, ஜி.பி.எஸ். மற்றும் என்.எஃப்.சி. உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்யும்.
கை.ஓ.எஸ். இன் மற்றொரு முக்கிய அம்சம் இது குறைந்தளவு மெமரியை எடுத்துக் கொள்ளும். கூகுள் அசிஸ்டண்ட், யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை ஃபீச்சர்போன் மாடல்களான ஜியோபோன் மற்றும் நோக்கியா 8110 4ஜி-யில் வழங்கி வருகிறது.
மீடியாடெக் சிப்செட்களில் கை ஓ.எஸ். இயங்குதளம் வழங்குவதன் மூலம் ஃபீச்சர் போன்களில் 3ஜி மற்றும் 4ஜி வசதியை 256 எம்.பி. அல்லது 512 எம்.பி. மெமரி கொண்ட சாதனங்களிலும் வழங்க முடியும் என இருநிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X