என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Smartphone"
- ரெட்மி A3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
- இந்த ஸ்மார்ட்போன் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரெட்மி A3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.88 இன்ச் HD+ ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 4ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்டுகள் மென்பொருள் அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ் மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5160 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்டாரி பிளாக், ஸ்பார்க்கிள் பர்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 499 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை நவம்பர் 27 ஆம் தேதி அமேசான், Mi வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
- இந்த மாடல் விற்பனைக்கு வரும் என்று தகவல்.
- ஐபோன் SE 4 மாடலில் 48MP பிரைமரி கேமரா வழங்கப்படலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. பலமுறை இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், சில முறை இந்த மாடல் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் SE 4 மாடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 2025 மார்ச் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டு அதன்பிறகு இந்த மாடல் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஐபோன் SE 4 மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் எல்.ஜி. இன்னோடெக் உடன் கூட்டணி அமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி எல்.ஜி. நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு கேமரா மாட்யூல் வினியோகம் செய்ய இருக்கிறது. வர்த்தக ரீதியிலான உற்பத்திக்கு முன் செய்ய வேண்டிய பரிசோதனைகளை ஆப்பிள் தற்போது மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐபோன் SE 4 மாடலில் 48MP பிரைமரி கேமரா, ஆப்பிளின் A18 சிப்செட், 3279 எம்ஏஹெச் பேட்டரி, ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் சப்போர்ட், ஃபேஸ் ஐடி, 20 வாட் வயர்டு சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- பாலியில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படுகிறது.
- ஒப்போ ஸ்மார்ட்போன் கலர் ஓஎஸ் 15 உடன் விற்பனைக்கு வருகிறது.
ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபைண்ட் X8 சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் (நவம்பர் 21) சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் கலர் ஓஎஸ் 15 உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் உள்ள பாலியில் நவம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் கொண்டு அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமை ஒப்போ ஃபைண்ட் X8 சீரிஸ் பெறும் என்று தெரிகிறது. புதிய ஃபைண்ட் X8 சீரிஸ் 7.85mm அளவில் 193 கிராம் எடை கொண்டுள்ளது. இது பயன்படுத்த மிகவும் கச்சிதமாகவும், எடை குறைவான அனுபவத்தையும் கொடுக்கும்.
இந்த சீரிஸில் ஒவ்வொரு மாடலின் லென்ஸூம் 50MP சென்சார் கொண்டிருக்கும். இதில் ஃபைண்ட் X8 மாடலில் பிரைமரி, அல்ட்ரா வைடு மற்றும் டெலிபோட்டோ சென்சார் வழங்கப்படுகிறது. ஃபைண்ட் X8 ப்ரோ மாடலில் கூடுதலாக டெலிபோட்டோ லென்ஸ் சேர்த்து மொத்தம் நான்கு சென்சார்கள் வழங்கப்படுகிறது.
புதிய ஒப்போ ஃபைண்ட் X8 ஸ்டார் கிரே மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களிலும், ஃபைண்ட் X8 ப்ரோ மாடல் ஸ்பேஸ் பிளாக் மற்றும் யூனிக் பியல் மற்றும் ஷிமெரிங் ஃபினிஷ் ஆப்ஷன்களிலும் கிடைக்கும். இத்துடன் X8 ப்ரோ மாடலில் குயிக் பட்டன் வசதி வழங்கப்படுகிறது.
- வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார்.
- உணர்வதற்குள் அவரது கையில் தீ காயங்கள் ஏற்பட்டது.
சீனாவில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவை அடுத்த சான்சியில் பெண் ஒருவர் பயன்படுத்தி வந்த ஐபோன் மாடல் அவர் உறங்கிக் கொண்டு இருந்த போது வெடித்தது. இதனால் அவருக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆப்பிள் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது ஆப்பிள் நிறுவனம் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது உறக்கத்தில் இருந்த பெண்ணின் கை தவறுதலாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலின் மீது பட்டது. உடனே ஐபோன் மாடல் வெடித்தது. இதனை சம்பந்தப்பட்ட பெண் உணர்வதற்குள் அவரது கையில் தீ காயங்கள் ஏற்பட்டது.
இதில் பெண்ணுக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டதோடு, ஐபோன் மாடல் முழுமையாக சேதமடைந்துள்ளது. இதுதவிர சம்பவம் நடந்த அறையின் சுவர்களில் கரும்புகையால் ஏற்பட்ட சுவடு மற்றும் மெத்தை தீயில் எரிந்துள்ளது. இதில் வெடித்து சிதறிய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலை அந்த பெண் கடந்த 2022 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்.
இது குறித்த முதற்கட்ட விசாரணையில் பேட்டரி இயக்கத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகவே ஐபோன் வெடித்து இருக்கும் என்று தெரியவந்துள்ளது. தனது ஐபோன் ஏன் வெடித்தது என்ற காரணத்தை அறிந்து கொள்ளும், தனக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் வீட்டில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற முடியும் என்று பாதிக்கப்பட்ட பெண் நம்பிக்கை கொண்டுள்ளார்.
- ஸ்மார்ட்போனின் பேக் பேனலை இருள் சூழ்ந்த பகுதிகளில் ஒளிர செய்யும்.
- ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
நத்திங் நிறுவனத்தின் போன் 2a பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது போன் 2a பிளஸ் மாடலை போன்ற டிசைன் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது. எனினும், இதன் அம்சங்களை நத்திங் கம்யூனிட்டி உருவாக்கி இருக்கிறது.
இதில் உள்ள அம்சங்கள் உலகின் 47 நாடுகளை சேர்ந்தவர்கள் கடந்த ஆறு மாதங்களில் சமர்பித்த 900-க்கும் அதிக பரிந்துரைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளன. கம்யூனிட்டி எடிஷன் மாடலில் கிரீன்-டின்ட் செய்யப்பட்ட பாஸ்போரசென்ட் மெட்டீரியல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் பேக் பேனலை இருள் சூழ்ந்த பகுதிகளில் ஒளிர செய்யும்.
இந்த ஸ்மார்ட்போன் கம்யூனிட்டி உருவாக்கிய ஆறு வால்பேப்பர்களுடன் வருகிறது. இதன் பாக்ஸில் நத்திங் டிசைன் மொழி பின்பற்றப்பட்டு இருக்கிறது. இவைதவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய நத்திங் போன் 2a பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உலகம் முழுக்க வெறும் 1000 யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 5160 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
போக்கோ நிறுவனம் சத்தமின்றி தனது C75 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. போக்கோ சர்வதேச வலைதளத்தில் போக்கோ C75 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. போக்கோ C75 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 50MP பிரைமரி கேமரா, இரண்டாவது சென்சார், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரேம் திறனை 16 ஜிபி வரை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 5160 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு டூயல் சிம் வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் கொண்டுள்ளது.
புதிய போக்கோ C75 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 9 ஆயிரத்து 164 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 845 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இரு மாடல்களிலும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
- இரு மாடல்களிலும் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் X8 சீரிஸ்- X8 மற்றும் X8 ப்ரோ மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர்ஓஎஸ் 15 உள்ளது. முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள X8 சீரிஸ் மாடல்கள் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று ஒப்போ தெரிவித்துள்ளது.
அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஃபைண்ட் X8 மாடலில் 6.59 இன்ச் 1.5K AMOLED LTPO பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபைண்ட் X8 ப்ரோ 6.78 இன்ச் 2K மைக்ரோ எல்இடி AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
இத்துடன் இரு மாடல்களிலும் மீடியாடெகி டிமென்சிட்டி 9400 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஃபைண்ட் X8 மாடலில் 50MP வைடு ஆங்கில் கேமரா, 50MP ஹேசில்பிலாடு போர்டிரெயிட் கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் ப்ரோ மாடலில் கூடுதலாக 50MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.
ஒப்போ ஃபைண்ட் X8 மாடலில் 5630 எம்ஏஹெச் பேட்டரி, X8 ப்ரோ மாடலில் 5910 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. புதிய ஃபைண்ட் X8 சீரிஸ் மாடல்கள் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர் ஓஎஸ் 15 கொண்டுள்ளன.
இரு மாடல்களிலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், IP69 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5ஜி, வைபை 7, யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் என்எஃப்சி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஃபைண்ட் X8 சீரிஸ் விலை இந்திய மதிப்பில் ரூ. 49,615 என துவங்குகிறது.
- ரியல்மி P1 ஸ்பீடு ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும்.
- இந்த ஸ்மார்ட்போன் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல்.
ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய P1 ஸ்பீடு 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை ரியல்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி புதிய ரியல்மி P1 ஸ்பீடு ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 எனர்ஜி 5ஜி பிராசஸர், ஹோல் பன்ச் டிஸ்ப்ளே, பின்புறம் வட்ட வடிவம் கொண்ட கேமரா கட் அவுட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி P சீரிஸ் மாடல்களில் புதுவரவாக இணைகிறது. முன்னதாக இதே சீரிசில் ரியல்மி P1, ரியல்மி P1 ப்ரோ மற்றும் ரியல்மி P2 ப்ரோ ஆகிய மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தொடர்ந்து புதிய ரியல்மி P1 ஸ்பீடு ஸ்மார்ட்போன் வருகிற 15 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் உள்ள பிரத்யேக மைக்ரோசைட்டில் இடம்பெற்றுள்ளன.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி P1 ஸ்பீடு ஸ்மார்ட்போன் கூலிங் வசதி, 50MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் சார்ஜிங் வசதி, IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
லாவா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. லாவா அக்னி 3 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய லாவா அக்னி 2 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.78 இன்ச் 1.5K 3D Curved AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7300X பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டுள்ளது. மேலும் மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP 3x டெலிபோட்டோ கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டாவது AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் பயனர்கள் அழைப்பு விவரங்கள், நோட்டிபிகேஷன், செல்பி எடுத்தல், மியூசிக் பிளேயர் மற்றும் பல சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்திய சந்தையில் புதிய லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் பிரிஸ்டைன் கிளாஸ் மற்றும் ஹீதர் கிளாஸ் என இரண்டுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்தது 999 என்றும் சார்ஜர் உடன் வாங்கும் போது இதன் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என மாறிவிடும். இதே போன்று 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல், சார்ஜர் உடன் சேர்த்து ரூ. 24 ஆஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- சாம்சங் கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போனிற்கு அமேசான் தளத்தில் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி M55s ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் விலை அறிமுகத்தின் போது முறையே ரூ. 19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 22 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 256 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான அமேசான் கூப்பன் வழங்கப்படுகிறது.
இதே போன்று கேலக்ஸி M55s 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலுக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவற்றை சேர்க்கும் போது, இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 20 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 17 ஆயிரத்து 999 என மாறிவிடுகிறது.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M55s 5ஜி மாடலில் டூயல் டோன் பேக் பேனல், மெல்லிய டிசைன் கொண்டுள்ளது. இத்துடன் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று லென்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ 6.1 கொண்டுள்ள கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
- புதிய தின்க்போன் மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 4310 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய தின்க்போன் 25 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6.36 இன்ச் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பில்டு கொண்டிருக்கும் புதிய தின்க்போன் மாடலில் 13MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 4310 எம்ஏஹெச் பேட்டரி, 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் சப்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.
- ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
- சீன வெர்ஷனில் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் 50MP கேமரா கொண்டிருந்தது.
சியோமி நிறுவனம் சீன சந்தையில் தனது ரெட்மி நோட் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
இது குறித்து சியோமிடைம் வெளியிட்டுள்ள தகவல்களில் ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் சாம்சங்கின் ISOCELL HP3 கேமரா சென்சார் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி சீன சந்தையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களில் உள்ள 50MP பிரைமரி கேமரா சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தெரிகிறது.
சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் 200MP சாம்சங் ISOCELL HP3 கேமரா சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் சீன வெர்ஷனில் 50MP கேமரா தான் வழங்கப்பட்டு இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்