என் மலர்
நீங்கள் தேடியது "software engineers"
- மணமகன் தேவை என செய்தித்தாளில் வெளியான விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- அதில் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவு செய்து போன் செய்யவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மணமகன் தேவை என பெண் வீட்டார் தரப்பில் செய்தித்தாளில் வெளியிட்ட விளம்பரம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியது. பெண் வீட்டார் தரப்பில் மணப்பெண்ணுக்கு யார் மாப்பிள்ளையாக வரவேண்டும் என்பதை தெரிவித்ததே இதற்கு காரணம்.
செய்தித்தாளில் வெளியான அந்த விளம்பரத்தில், சாட்வேர் இன்ஜினியர்கள் தயவுசெய்து போன் செய்யவேண்டாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மணமகன் தேவை என்ற தலைப்பில் செய்தித்தாளில் வெளியான அந்த விளம்பரத்தில், 24 வயதான எம்.பி.ஏ. படித்துள்ள அழகான பணக்கார தொழில் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ், டாக்டர், தொழிலதிபர் மணமகன் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவுசெய்து போன் செய்ய வேண்டாம் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பெண் வீட்டாரை தொடர்பு கொள்ள இ-மெயில் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட இந்த விளம்பரத்திற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விளம்பரம் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.