என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "son killed"
மதுக்கூர்:
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள காடந்தங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார். இவருடைய மனைவி அபிநயா (வயது 26). இவர்களுடைய மகன் துரைமுருகன் (7), மகள் ஜெயவந்தினி (4). சரவணக்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
துரைமுருகன், மற்றும் ஜெயவந்தினி ஆகியோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என தெரிகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அபிநயா மிகுந்த சிரமம் அடைந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அபிநயா, 2 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு தனது மனதை கல்லாக்கிக்கொண்டு வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து தனது மகன் துரைமுருகன், மகள் ஜெயவந்தினி ஆகியோருக்கு குடிப்பதற்காக கொடுத்தார்.
விஷத்தை குடித்த துரைமுருகனும் ஜெயவந்தினியும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதன் பின்னர் அபிநயாவும் விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அபிநயாவும் அவருடைய மகன் துரைமுருகனும் பரிதாபமாக இறந்தனர். ஜெயவந்தினி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தாள்.
இந்த நிலையில் அபிநயா வீட்டுக்கு வந்த அக்கம், பக்கத்தினர் அங்கு பார்த்த காட்சியால் அதிர்ச்சியில் அடைந்தனர். அங்கு அபிநயாவும் அவரது மகன் துரைமுருகனும் பிணமாக கிடப்பதும், ஜெயவந்தினி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. உடனடியாக ஜெயவந்தினியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேனி:
தேனி அருகே சின்னமனூர் பத்திரகாளிபுரம் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் ஈஸ்வரன் (வயது36). ஈஸ்வரன் குடி பழக்கத்திற்கு ஆளானதால் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. பணம் தர மறுத்தால் போசை கொன்று விடுவதாக ஈஸ்வரன் மிரட்டி உள்ளார். குடி பழக்கத்திற்கு ஆளான மகனால் போஸ் நிம்மதி இழந்தார்.
சம்பவத்தன்று ஈஸ்வரன், போசிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். தர மறுக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த போஸ் அருகில் இருந்த கல்லை எடுத்து ஈஸ்வரனை கடுமையாக தாக்கினார். படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து போஸ் பூலாநந்தபுரம் வி.ஏ.ஓ. கல்யாணியிடம் ஒப்புதல் வாக்குமுலம் அளித்தார். வி.ஏ.ஓ. புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் போசிடம் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று காலை நடந்த பரபரப்பான இந்த கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சை அண்ணாநகர் 13-வது தெருவில் வசித்து வருபவர் முகமது ஜாகீர் (வயது 52). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் அப்துல் ரகுமான் (22).
அப்துல் ரகுமான், ஈரோட்டில் தங்கியிருந்து மருத்துவ விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் முகமது ஜாகீருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி கடையை பூட்டி விட்டு சென்னை உள்பட பல இடங்களுக்கு சென்று வருவாராம். இதை அவரது மனைவி தட்டி கேட்டார். இதனால் ஆத்திரத்தில் முகமது ஜாகீர் , மனைவியை தாக்கியுள்ளார். இதையடுத்து அவர், ஈரோட்டுக்கு சென்று மகன் அப்துல் ரகுமானுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அப்துல் ரகுமான், கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு தஞ்சையில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்தார்.
அவர் தந்தை முகமது ஜாகீர், பல பெண்களுடன் பழக்கம் வைத்துள்ளதை கண்டித்து சத்தம் போட்டார். மேலும் தாயுடன் சேர்ந்து வாழும்படியும் கூறினார். இதுதொடர்பாக தந்தை- மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதேபோல் நேற்று இரவும் தகராறு நடந்தது. பிறகு அப்துல் ரகுமான் வீட்டில் படுத்து தூங்கி விட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை எழுந்த முகமது ஜாகீர், தூங்கி கொண்டிருந்த மகன் அப்துல் ரகுமானை பார்த்து கடும் ஆத்திரம் அடைந்தார்.
உடனே வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை தூக்கி அப்துல் ரகுமான் தலையில் போட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைநத அப்துல் ரகுமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மகன் துடிதுடித்து இறந்ததை பார்த்த பிறகு முகமது ஜாகீர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் வீடு நீண்டநேரமாக திறக்காமல் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தனர். இதனால் கதவை திறந்து பார்த்த போது கட்டில் அருகே ரத்தவெள்ளத்தில் அப்துல் ரகுமான் பிணமாக கிடப்பதையும், அருகில் கிரைண்டர் கல் இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தஞ்சை மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்துல் ரகுமான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்து வரும் முகமது ஜாகீரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெற்ற மகனையே தந்தை கிரைண்டர் கல்லை போட்டு கொன்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்