search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spectacular sky fun"

    • தேரோட்டம் கடந்த 13ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.
    • மாரியம்மன் யானை மற்றும் சிங்க வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கிய நிலையில் கம்பம் போடுதல், கொடியேற்றம் பூவோடு எடுத்தல் மற்றும் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 13ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் குட்டை திடல் பகுதியில் நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கையை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் நிறைவு நாளன்று மாரியம்மன் யானை மற்றும் சிங்க வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது . கடலூர் மாவட்டம் குட்டியாங் குப்பம் தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்த கவியரசன் பிரபு குழுவினர் வான வேடிக்கை நடத்தினர். இதில் இரண்டு அடி அவுட்டு, 3 அடி அவுட்டு ,இரண்டடி மாலை வெடி, சரம் மூன்றடி, குண்டு வெடி சரம் ,கலர் மத்தாப்பு ,செடி, மரம் ,பாம்பு வெடி உட்பட பல்வேறு வகையான வெடிகள் வானத்தில் கலர் கலராக வர்ண ஜாலங்களுடன் வெடித்தன. வெடிக்கும் வெடிகளை பார்த்து பொது மக்கள் உற்சாகம் அடைந்தனர். தீயணைப்புத் துறையினர் ,காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். உடுமலை நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வான வேடிக்கையை கண்டுகளித்தனர்.

    வானவேடிக்கை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ் எஸ். ஸ்ரீதர், செயல் அலுவலர் சீனிவாசன், சஞ்சீவ் சுந்தரம் மற்றும் நன்கொடையாளர்கள் செய்திருந்தனர்.

    ×