என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spices"

    • தீபாவளியின் போதுதான் நாம் பெரும்பாலும் அதிகளவிலான எண்ணெய் உணவுகள் எடுத்துக்கொள்வோம்.
    • தீபாவளி மட்டுமின்றி எப்போதும் இந்த மருந்தை வீட்டில் தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது.

    தீபாவளியின் போதுதான் நாம் பெரும்பாலும் அதிகளவிலான எண்ணெய் உணவுகள் எடுத்துக்கொள்வோம். அதுவும் எண்ணெய், கொழுப்பு, சர்க்கரை ஆகிய மூன்றையும் ஒரேநேரத்தில் எடுத்துக்கொள்வோம். இவற்றால் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் வயிற்று உப்புசம், திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இவற்றை சரிசெய்ய மருத்துவ குணங்கள் கொண்ட, எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கும் தீபாவளி லேகியம் குறித்து காண்போம்.

    தேவையான பொருட்கள்

    தீபாவளி லேகியப்பொடி

    வெல்லம்

    தேன்

    நெய்

    இஞ்சி

    நல்லெண்ணெய்

    செய்முறை

    கடையில் தீபாவளி லேகிய மருந்து பொடி கிடைக்கும். அந்தப்பொடியை வைத்து தீபாவளி லேகியம் செய்வது எப்படி என பார்ப்போம். கடையில் கிடைக்கும் தீபாவளி லேகியப்பொடியை 100 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப 100 கிராம் இஞ்சி எடுத்துக்கொண்டு, அதன் தோலை நன்றாக சீவிக்கொள்ள வேண்டும். பின்னர் சிறுசிறு துண்டுகளாக இஞ்சியை வெட்டி, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த சாற்றை அரைமணிநேரம் அப்படியே வைக்கவேண்டும். அதன் அடியில் வெள்ளை நிறத்தில் தண்ணீர் படியும். கீழே படிந்ததை விட்டுவிட்டு, மேலே நிற்கும் இஞ்சி தண்ணீரை தனியே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில், 200 கிராம் வெல்லத்தை எடுத்து பாகு காய்ச்சுவது போல் கரைக்க வேண்டும். வெல்லம் சூட்டில் கரைந்தபின் அதில், எடுத்துவைத்துள்ள இஞ்சித்தண்ணீரை ஊற்றவேண்டும். பின்னர் லேகியப்பொடியையும் சேர்க்கவேண்டும். அந்தக் கலவையை தொடர்ந்து கலந்துவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கலவை கெட்டியாக மாறும்போது, கொஞ்சம் சொஞ்சமாக இடையிடையே நெய் மற்றும் நல்லெண்ணெயை சேர்க்க வேண்டும். வேண்டுமானால் தேனும் சேர்த்துக் கொள்ளலாம். கலவை, அல்வா பதத்திற்கு வந்தபின் இறக்கி ஆறவைக்க வேண்டும். நன்கு ஆறியபின், அதனை உருண்டை பிடித்து வைத்துக்கொள்ளலாம். தீபாவளி லேகியம் ரெடி.


    பல்வேறு மூலிகைப் பொருட்களை உள்ளடக்கியதுதான் தீபாவளி லேகியம்

    தீபாவளி லேகியத்தின் நன்மைகள்...

    தீபாவளி மழைக்காலத்தில் வரும். அப்போது ஏற்படும் சளி, இருமல் பிரச்சனைக்கு இந்த லேகியம் நல்ல பலனைத்தரும். தீபாவளியின் போது நாம் எடுத்துக்கொள்ளும் எண்ணெய் பலகாரங்கள், உணவுகள் செரிமானக் கோளாறுக்கு வழிவகுக்கும். அப்போது இந்த லேகியம், செரிமான பிரச்சனையை எதிர்த்து போராட உதவுகிறது. தீபாவளி மட்டுமின்றி எப்போதும் இந்த மருந்தை வீட்டில் தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது. இது கடைகளில் கிடைக்கும் என்றாலும் வீட்டில் தயாரிப்பது ஆரோக்கியமானது. 

    • வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்
    • பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.

    அலுவலகம் சென்று வரும் பெண்களும், ஆண்களுக்கும் மிகவும் சவாலாக இருப்பது சாப்பாடுதான். சில நேரங்களில் வேலை பளு காரணமாக ஹோட்டல்களில் சாப்பிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் ஹோட்டல்களில் உபயோகிக்கும் மசாலா, சிக்கன், எண்ணெய் போன்றவற்றால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்று கவலையும் அடைகிறார்கள். உங்களுக்காக ஈஸியா வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 3

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    பூண்டு பொடியாக நறுக்கியது - ஒரு டேபிள் ஸ்பூன்

    எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்

    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

    சோயா சாஸ் - 3 டீஸ்பூன்

    வினிகர் - ஒரு டீஸ்பூன்

    கேரட் - 1

    குடைமிளகாய் சிகப்பு மற்றும் மஞ்சள் - 1 ஒன்று

    வடித்த சாதம் - 2 கப்

    வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்


    செய்முறை:

    • முதலில் scramble egg செய்ய ஒரு கடாயில் எண்ணெய் முட்டை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலக்கவும். பின்னர் அதை தனியாக ஒரு பக்கம் எடுத்து வைத்து கொள்ளவும்.

    • சிக்கனை 65 மசாலா சேர்ந்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். பொரித்த சிக்கன்களை சிறுசிறு துண்டுகலாக வெட்டிக் கொள்ளவும்.

    • கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய சிக்கன் சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.

    • அதனுடன் சோயா சாஸ், கேரட், குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    • குடைமிளகாய் கேரட் வெந்ததும் வடித்த சாதம் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்

    • பின் scramble egg வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    • இதோ சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டிலே ரெடி.

    இதுபோல் வீட்டிலேயே நாம் கண்ணெதிரே செய்து சாப்பிடும் உணவுகளால் நமது உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

    ×