என் மலர்
நீங்கள் தேடியது "Sri Lanka India"
- இலங்கைக்கு எதிரான தொடரில் ரோகித், கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் தொடர்வார்.
புதுடெல்லி:
இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட டி20 தொடரில் முதல் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இதனை தொடர்ந்து இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டி20-யின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார். ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.