என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "star park"
- கோவில் பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறவதில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- ஈரோடு மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இக்கோவிலுக்கு வருகின்றனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரானது என சிறப்புவாய்ந்த சோழர் காலத்து பழமைவாய்ந்தபெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேரான தேரோட்டம் விமர்சையாக நடைபெறும் திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இக்கோவிலுக்கு வருகின்றனர்.
கோவில் பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறவதில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இக்கோவில் வளாகத்தில் நட்சத்திர நந்தவன பூங்கா உள்ளது. இந்த பூங்கா சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஒருவரால் பக்தர்கள் வசதிக்காக ஒன்பது நட்சத்திர மரங்கள் வளர்க்கப்பட்டு, நடைபாதை, குழந்தைகள் விளையாட உபகரணங்கள் எனபல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் செய்து வைத்தார். தொடர்ந்து பராமரிப்பு பணகள் செய்யாமல் நாளடைவில் பூங்கா முழுவதும் செடி, கொடிகள் அடர்ந்துபுதர்மண்டி பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் அங்கு செல்வதில்லை. எனவே அதனை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.