search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State Level Competition"

    • 63-வது மாநில அளவிலான காவல்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • திருப்பூர் மாநகர ஆயுதப்படை முதல்நிலை பெண் காவலர் விஜயபாண்டி பங்கேற்றார்.

    திருப்பூர்

    சென்னை புதுப்பேட்டை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் 63-வது மாநில அளவிலான காவல்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர ஆயுதப்படை முதல்நிலை பெண் காவலர் விஜயபாண்டி பங்கேற்றார். இவர் மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம், பளுதூக்கும்போட்டியில் வெள்ளிப்பதக்கம், கைமல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

    இதுபோல் திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர் அமித்குமார், பளுதூக்கும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.இதைத்தொடர்ந்து பதக்கம் வென்ற ஆயுதப்படை காவலர்கள் விஜயபாண்டி, அமித்குமார் ஆகியோரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    • கோடைகால இலவச சிலம்ப பயிற்சி நிறைவு விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
    • இப்போட்டியில் 30 அணிகளை சேர்ந்த சுமார் 500 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பூரணாங்குப்பம் கிராமத்தில் உள்ள மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற கலை வளர்ச்சி கழகம், சார்பில் பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் திடலில் புதுச்சேரி, தமிழ்நாடு மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் மற்றும் 21 -ம் ஆண்டு கோடைகால இலவச சிலம்ப பயிற்சி நிறைவு விழா வருகிற 6-ந் தேதி  நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற கலை வளர்ச்சிக் கழக தலைவர் கலைமாமணி விருது பெற்ற பழனிவேல் வரவேற்புரை ஆற்றுகிறார்.

    மாமல்லன் சிலம்பம் கழக செயலாளர் சீனிவாசன், ஆலோசகர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பின்னர் பரிசளிக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளராக பாஸ்கர் என்ற தட்சணா மூர்த்தி எம்.எல்.ஏ., புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் இணை பதிவாளர் பெருமாள், திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் பவர்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

    முடிவில் பொருளாளர் சியாமளா பழனிவேல் நன்றி கூறுகிறார்.

    இப்போட்டியில் 30 அணிகளை சேர்ந்த சுமார் 500 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த தகவலை மாமல்லன் சிலம்ப கழக செய்தி தொடர்பாளர் சங்கரன் தெரிவித்துள்ளார்.

    ×