search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide student"

    கும்பகோணம் அருகே கல்லூரி படிப்பை தொடரமுடியாததால் மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே கடிச்சம்பாடி மேலத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகள் தரண்யா (வயது 18). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி திறந்ததையொட்டி கல்லூரிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது தனது தாய் விஜயாவிடம் கல்லூரி கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ஆனால் முருகேசனும், விஜயாவும் நீ கல்லூரிக்கு செல்ல வேண்டாம். கல்லூரிக்கு பணம் கட்ட வசதி இல்லை என்று கூறி கண்டித்தனராம். இதனால் மனமுடைந்த தரண்யா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அவரது தாய் விஜயாவும், அதிர்ச்சியில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    அக்கம் பக்கதினர் 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி தரண்யா நேற்று இறந்தார். விஜயா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கும்பகோணம் அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டுகருப்பூர் கீழபுதுத்தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் அபிநயா (வயது 16) . இவர் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் அரசு பொது தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

    கடந்த 23-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளிவந்தன. இதில் மாணவி அபிநயா 371 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மனமுடைந்த அவர் கடந்த 31-ந் தேதி இரவு வீட்டில் இருந்த எலிமருந்தை சாப்பிட்டுள்ளார்.

    மயங்கி விழுந்த அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிநயா நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×