search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Survey of Lands"

    • இக்கோவில்களுக்கு பக்தா்களால் தானமாக வழங்கப்பட்ட ஏறத்தாழ 500 ஏக்கா் நிலங்கள் உள்ளன.
    • கோவில் நிலங்களை மீட்டு அதிக வருமானம் வரும் வகையில் முறைப்படி குத்தகைதாரா்களை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோவில், தெய்வநாயகி உடனமா் சோழீஸ்வர சுவாமி, வள்ளியிரச்சல் அழகு நாச்சியம்மன், மாந்தீஸ்வரா், வரதராஜப் பெருமாள், புஷ்பகிரி வேலாயுதசாமி, முத்தூா் சோழீஸ்வரா், மங்கலப்பட்டி உமய காளியம்மன், பாண்டீஸ்வரா், நாச்சிபாளையம் செல்லாண்டியம்மன், சேனாபதிபாளையம் திருமலை அம்மன், குருக்கத்தி செல்லாண்டியம்மன், லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரசுவாமி, வரதராஜப் பெருமாள், காவலிபாளையம் பொன்னாச்சியம்மன், உத்தமபாளையம் மாரியம்மன், காசிவிஸ்வநாதா், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி, மாரியம்மன், கண்ணபுரம் விக்ரம சோழீஸ்வரா், மாரியம்மன், செல்வவிநாயகா், பூசாரிவலசு திருமங்கிரிகுமாரசாமி, பொன்பரப்பி கன்னிமாா் சுவாமி ஆகிய கோவில்கள் உள்ளன.

    இக்கோவில்களுக்கு பக்தா்களால் தானமாக வழங்கப்பட்ட ஏறத்தாழ 500 ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோவில் பராமரிப்புக்கு பணம் தருவதாக ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் பேரில் பெரும்பாலான இந்த நிலங்கள் பல தலைமுறைகளாக பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அரசு உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைப்படுத்த தற்போது அறநிலையத் துறை நில அளவையாளா் ராகவேந்திரா் தலைமையில், செயல் அலுவலா் ராமநாதன் முன்னிலையில் அளவீடு செய்யும் பணி துவங்கி ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. கோவில் நிலங்களை மீட்டு அதிக வருமானம் வரும் வகையில் முறைப்படி குத்தகைதாரா்களை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×