search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suvendu Adhikari"

    • எங்களுடன் இருப்பவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற புதிய முழக்கத்தை கட்சி ஏற்படுத்த வேண்டும்.
    • நாங்கள் அனைவருடன் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்பதை பயன்படுத்தினோம்.

    மக்களவை தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாத காரணத்தினால் பாஜக மோசமான தோல்வியை சந்தித்தது. கட்சியின் மைனாரிட்டி (சிறுபான்மையினர்) பிரிவை நீக்க வேண்டும் என அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது மேற்கு வங்காள மாநில பாஜக கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், எங்களுடன் இருப்பவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற புதிய முழக்கத்தை கட்சி ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    நான் தேசியஅளவிலான முஸ்லிம்களுக்காக பேசினேன். நாங்கள் அனைவருடன் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்பதை பயன்படுத்தினோம். ஆனால், இனிமேல் அவ்வாறு நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் எங்களுடன் இருப்பவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சிறுபான்மையினர் பிரிவு தேவையில்லை எனத் தெரிவித்தார்.

    இது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில், தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது. தேசத்திற்காகவும், மேற்கு வங்காள மாநில நலத்துடன் இருப்பவர்களுடன் நாம் இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். எங்களுடன் நிற்காதவர்கள், தேசம் மற்றும் மேற்கு வங்காள நலனுக்கு எதிராக செயல்படுபவர்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். மேலும், மம்தா பானர்ஜியைப் போல மக்களைப் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிரித்து பார்க்கக் கூடாது. இந்தியர்களாக பார்க்க வேண்டும். பிரதமரின் சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஷ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ் என்பதில் என்னை உள்ளடக்கியுள்ளேன் என்றார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வாக்காளர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் சிறுபான்மையினர் ஆவார்கள்.

    2014-ல் சப்கா சாத் சப்கா விகாஸ் என இருந்து பாஜக முழக்கம், 2019-ல் சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஷ்வாஸ் ஆக இருந்தது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஜிஹாதி குண்டர்களால் பல இடங்களில் இந்துக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.
    • மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.

    இதில் மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது EVM தொடர்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது தொடர்பாக சுவேந்து அதிகாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு சுவேந்தி அதிகாரி "EVM குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி கர்நாடகா மற்றும் தெலுங்கானா தேர்தலில் வெற்றி பெற்றபோது EVM சரியானது. பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. 400 இடங்களுக்கு மேல் பிடிக்கும் வகையில சென்று கொண்டிருக்கிறது" என்றார்.

    ×