search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sydney Cricket Ground"

    • இந்தியாவுக்கு வெளியே சிட்னி கிரிக்கெட் மைதானம் எனக்கு ரொம்பவே பிடித்த ஒன்று என சச்சின் தெரிவித்துள்ளார்.
    • லாரா மற்றும் சச்சினின் கிரிக்கெட் கேரியரில் சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு பிரத்யேக இடம் உள்ளது.

    சிட்னி:

    கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாரவையும் சிட்னி கிரிக்கெட் மைதானம் கவுரவித்துள்ளது. அவர்களின் நினைவாக மைதானத்தின் வாயிலுக்கு (கேட்ஸ்) அவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    வருகை தரும் அனைத்து வீரர்களும் இப்போது புதிதாக பெயரிடப்பட்ட லாரா-டெண்டுல்கர் கேட்ஸ் வழியாக களம் இறங்குவார்கள். டெண்டுல்கரின் 50-வது பிறந்தநாளை ஒட்டி இவ்விருவருக்கும் இந்த கௌரவம் வழங்கப்பட்டது. 

    லாரா மற்றும் சச்சினின் கிரிக்கெட் கேரியரில் சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு பிரத்யேக இடம் உள்ளது. லாரா, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை பதிவு செய்தது சிட்னி மைதானத்தில்தான். 1993-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் குவித்திருந்தார். 

    சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் விளையாடி உள்ளார். அதிகபட்சமாக இந்த மைதானத்தில் 241 ரன்கள் எடுத்துள்ளார். இங்கு அவரது பேட்டிங் சராசரி 157. லாரா, சிட்னி மைதானத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    இந்தியாவுக்கு வெளியே சிட்னி கிரிக்கெட் மைதானம் எனக்கு ரொம்பவே பிடித்த ஒன்று என சச்சின் தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான கிரேக் சேப்பல் இந்திய அணி கையெழுத்திட்ட பேட்டை விற்பனை செய்ய இருக்கிறார்.
    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேக் சேப்பல். தலைசிறந்த கிரிக்கெட் விமர்சகரான இவர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். இவருக்கும் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கும் இடையில் பிரச்சனை உருவானதால் தலைமை பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    டோனி தலைமையிலான இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வீரர்கள் கையெழுத்திட்ட பேட் ஒன்று கிரேக் சேப்பலுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அந்த பேட்டை தனது தொண்டு நிறுவனத்திற்காக தற்போது விற்பனை செய்ய இருக்கிறார்.



    இதை கிரேக் சேப்பல் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சிட்னியில் வசித்து வரும் 400-க்கும் மேற்பட்டவர்கள் மே 24-ந்தேதி சிட்னி மைதானத்தில் நடைபெறும் டின்னரில் கலந்து கொள்வார்கள். இதில் 30 பேர் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள். ஒவ்வொருவருக்கும் தலா 275 டாலர்கள் நுழைவுத் தொகையாக வசூலிக்கப்பட இருக்கிறது. இந்த டின்னர் நிகழ்ச்சியின்போது இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட பேட் ஏலத்தில் விடப்படும்’’ என்றார்.

    ஆஸ்திரேலியாவில் வீடுகள் இன்றி வாழ்பவர்கள் மறுவாழ்விற்காக கிரேக் சேப்பல் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கு பணம் திரட்டுவதற்கான இந்த ஏற்பட்டை செய்துள்ளார்.
    ×