என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » symptoms of vitamin b12 deficiency
நீங்கள் தேடியது "Symptoms of vitamin B12 deficiency"
நீங்கள் சோர்வாக அசதியாக இருக்கின்றீர்கள் என்றால் எந்த காரணமும் சொல்லாமல் உங்கள் வைட்டமின் பி12 சரியாக இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்
வைட்டமின்கள், தாது உப்புகள் பற்றி நிறைய தெரிந்து கொள்கின்றோம். ஆனால் அதனை சரியாகப் பெறுகின்றோமா, பயன் படுத்துகின்றோமா என்றால் முழுமையாய் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பலருக்கு சிறிதளவு பலன் கூட கிடைக்கவில்லை. அதற்கான முயற்சிகளை அவர்கள் மருத்துவரிடம்சென்று பெறவில்லை என்றே சொல்லலாம்.
அதில் வைட்டமின் பி12 பற்றிய சில குறிப்புகளைப் பார்ப்போம்.
நீங்கள் சோர்வாக அசதியாக இருக்கின்றீர்கள் என்றால் எந்த காரணமும் சொல்லாமல் உங்கள் வைட்டமின் பி12 சரியாக இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் ரத்த சிகப்பு அணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது குறிப்பிட்ட பிரிவு ரத்த சோகையினைத் தவிர்க்கின்றது. வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் பொழுது ரத்த சோகை பாதிப்பு ஏற்படும். அதன் காரணமாக சோர்வு, சக்தியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த வைட்டமின் பி12 அதிக அசைவ உணவுகளான மீன், முட்டை, பால், மாமிச உணவுகள் இவற்றில் உள்ளது. சோயா, பாதாம் இவற்றிலும் உள்ளது.
வைட்டமின் பி12 இருதய ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கின்றது. இதன் காரணமாக மாரடைப்பு பாதிப்பு குறைகிறது.
ஆரோக்கியமான நரம்பு மண்டலம்:
பி12 உங்கள் நரம்பு மண்டலத்தினை மிகச் சிறப்பாக பாதுகாக்கின்றது. இதில் குறைபாடு இருக்கும் பொழுது கை, கால் விரல் நுனிகளில் மரத்து போதல், ஊசி குத்துவது போல் இருத்தல், குறுகுறுப்பு போன்ற பாதிப்பினை உணர்வீர்கள். வைட்டமின் பி12 மையலின் என்ற ஒரு உறையினை நரம்புகளின் மீது அளித்து நரம்பினை பாதுகாக்கின்றது. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் நரம்பு மண்டலம் சீராய் இராது.
வைட்டமின் பி12 குறைபாட்டை காட்டும் அறிகுறிகள்
* கை, கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு, குறுகுறுப்பு போன்றவை.
* ரொம்பவும் ஓய்ந்து போகுதல்
* வெளிரிய அல்லது மஞ்சள் நிற சருமம்.
* வைட்டமின் பி12 குறைபாடு மஞ்சள் காமாலையினைக் கூட ஏற்படுத்தலாம்.
* மிக அதிக அளவு பி12 குறைந்து இருந்தால் சில வகை புற்று நோய் பாதிப்பிற்கான ஆய்வுகள் செய்யப் படுகின்றன.
* சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு பி12 பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
* சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் வைட்டமின் பி12 குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர்.
* நெஞ்செரிச்சல் பாதிப்பு உடையவர்கள் அதற்கான மருந்து எடுத்துக் கொள்ளும் பொழுது வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
* அதிக ஞாபக மறதி ஏற்படுகின்றதா? உங்கள் பி12 அளவினை மருத்துவர் மூலம் சோதித்து குறைபாட்டினை சரி செய்து கொள்ளுங்கள்.
* 50 வயதினைத் தாண்டியவர்களுக்கு வயிற்றில் ஆசிட் சுரப்பது குறைந்து இருக்கும். வயிற்றில் ஆசிட் பி12 சத்தினை உறிஞ்சிக் கொள்வதற்குத் தேவையாகின்றது. எனவே 50 வயதினைத் தாண்டியவர்கள் மருத்துவர் மூலம் ஆலோசனைப் பெறுங்கள்.
* உங்கள் நாக்கு உங்கள் ஆரோக்கியத்தினைப் பற்றி கூறிவிடும். பி12 குறைபாடு நாக்கில் வீக்கத்தினைக் கொடுக்கும். இதனால் சாப்பிட, பேச கடினமாய் இருக்கும்
வைட்டபின் பி 12 குறைபாடு கண் நரம்பியல் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால் பார்வை கோளாறுகள் ஏற்படலாம். பி12 குறைபாடு தொடரும் பொழுது நடப்பதில் கூட சிக்கல் ஏற்பட்டு விழுந்து விடலாம். சருமம் பொலிவின்றி இருக்கலாம். பி12 குறைபாடு வயிற்றுப் போக்கு, மலச் சிக்கல், பசியின்மை, எடை குறைதல் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவ உதவியுடன் பி12 எடுத்துக் கொண்டால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கும். கம்பீரமான தோற்றம்: நிமிர்ந்து நிற்றல், கூன் போடாது இருத்தல், நாற்காலியில் நத்தை போல் சுருண்டு அலுங்காது நிமிர்ந்து அமருதல். இவை அனைத்தும் நம் தோற்ற மதிப்பினைக் கூட்டும். தன்னம்பிக்கையினைத் தரும். உடலினை ஆரோக்கியமாய் வைக்கும். நடக்கும் பொழுதோ, உட்காரும் பொழுதோ, வண்டி வாகனம் ஓட்டும் பொழுதோ முதுகு நிமிர்ந்து இருப்பதே சரியானது. உங்களை நீங்களே கவனித்து பாருங்கள்.
இவ்வாறு நீங்கள் இல்லை என்று உங்களுக்கே புரியும். அநேகமாக நீங்கள் அமரும் நாற்காலி முறையானதாக இல்லாது இருக்கும். பைக், சைக்கிள் இவற்றில் செல்பவர்கள் கூட படிந்து, கோணலாகத்தான் செல்கின்றனர். இதன் பெயர் ஸ்டைல் என்று கூறிக் கொள்கின்றனர். முறையான வழிகளை நீங்கள் கடை பிடிக்காவிட்டால் உங்கள் தண்டு வடம் சுருண்டு, உருவிழந்து ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நிமிர்ந்து அமருதல்: நிமிர்ந்து அமருவதன் மூலம் நம் மூளைக்கு நாமே செல்லித் தருகின்றோம். ‘நான் ஆரோக்கியமாய் இருக்கின்றேன்’ என்று. கூன் போட்டு, வளைந்து உட்காருவது நம் மூளையினை ரொம்ப சோர்வாக, மன உளைச்சலுடன் உணரக் செய்யும். ஆக நாம் மேலும் சோர்வாக மன உளைச்சலுடன் இருப்போம்.
நிமிர்ந்து அமருவது நம்மை ஆக்கப் பூர்வமாகவும் மகிழ்வாகவும் ஆக்கும். மேலும் மடங்கி சுருங்கி அமர்பவர்கள் எப்போதும் சோகமாக, அழிவுப் பூர்வமாகவே சிந்தித்துக் கொண்டிருப்பார்களாம். நிமிர்ந்து அமர்தல் முறையான சீரான ரத்த ஓட்டத்தினை அளிக்கும். மடிந்து, கோணலாக அமரும் பொழுது சீரான ரத்த ஓட்டம் இருப்பதில்லை.
நிமிர்ந்த தோற்றம் ஜீரண சக்தியினை சீராக்கும். நிமிர்த்த தோற்றம் தலைவலி பாதிப்பு இல்லாது இருக்கும். கழுத்து இறுகாது, வலு விழக்காது இருக்கும்.
நிமிர்ந்த தோற்றம் முதுகு வலி இல்லாது இருக்கச் செய்யும். இவற்றினைப் படித்த பிறகு நிமிர்ந்த நடை, கூனின்றி அமர்தல், முறையாக வண்டி ஓட்டுதல் ஆகியவற்றினைச் செய்வோமாக.

×

X