search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழல்"

    • மது விற்பனையில் ஊழல், மணல் கடத்தல் மற்றும் பல பிரச்னைகள் அப்பட்டமாக நடக்கிறது.
    • பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை பெரிய அளவில் திருப்பி அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி.விஜயசாய் ரெட்டிக்கு எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரியை விமர்சிக்க தார்மீக உரிமை இல்லை.

    விஜய சாய் ரெட்டி மற்றும் முதல் மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளில் நிரபராதிகள் என்பது நிரூபிக்கப்படவில்லை.

    மது விற்பனையில் ஊழல், மணல் கடத்தல் மற்றும் பல பிரச்னைகள் அப்பட்டமாக நடக்கிறது.

    பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை பெரிய அளவில் திருப்பி அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஜெகன் மோகன் ரெட்டி 2019 தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை அளித்தார், ஆனால் அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டார். புரந்தேஸ்வரியை கேலி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒரு ரூபாய் ஊழலைக் கூட நான் சகித்துக் கொள்ள மட்டேன். பஞ்சாபை ஊழலற்ற மாநிலமாக மாற்ற விரும்புகிறேன் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. காங்கிரசை பின்னுக்கு தள்ளி அபார வெற்றியைப் பெற்றது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஆம் ஆத்மி ஆட்சியிலேயே ஊழல் குற்றச்சாட்டு நிகழ்ந்துள்ளது.

    பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சரான விஜய் சிங்லா ஊழலில் ஈடுபட்டதாக அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    விஜய் சுங்லா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி டெண்டர்கள் மற்றும் கொள்முதலில் ஒரு சதவீத கமிஷன் கோரியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பஞ்சாப் அரசு விஜய் சிங்லா மீது நடவடிக்கை எடுத்தது. தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசார் விஜய் சிங்லா மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவை பதவி நீக்கம் செய்து பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கூறியதாவது:-

    எனது அரசின் கீழ் ஒரு அமைச்சர் தனது துறையின் ஒவ்வொரு டெண்டர் மற்றும் கொள்முதல் செய்வதிலும் ஒரு சதவீதம் கமிஷன் கோரியதாக குற்றச்சாட்டு என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த விவகாரத்தை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டேன். இது எனக்கு மட்டுமே தெரியும். இது ஊடங்களுக்கோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கோ தெரியாது.

    சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா மீது கடும் நடவடிக்கை எடுத்து, அமைச்சரவையில் இருந்து நீக்குகிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கும் அறிவுறுத்தி உள்ளேன்.

    ஆம் ஆத்மி அரசு ஊழலை பொறுத்துக் கொள்ளாது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2015ம் ஆண்டு தனது உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்து வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தார்.

    ஒரு ரூபாய் ஊழலைக் கூட நான் சகித்துக் கொள்ள மட்டேன். பஞ்சாபை ஊழலற்ற மாநிலமாக மாற்ற விரும்புகிறேன்.

    ஆம் ஆத்மி அமைச்சர்களில் ஒருவர் இரண்டே மாதங்களில் ஊழலில் ஈடுபட்டதாக சில கட்சிகள் இப்போது சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் இதற்கு நான்தான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் தேர்வில் இழுபறி- முடிவு எடுக்க முடியாமல் திணறும் அ.தி.மு.க. தலைவர்கள்
    பகவந்த் மானின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
    பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சரான விஜய் சிங்லா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து, பதவியில் இருந்து நீக்கம் செய்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இந்நிலையில், பகவந்த் மானின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    பகவந்த் மான் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்கள் செயல் என் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. இன்று முழு தேசமும் ஆம் ஆத்மியை நினைத்து பெருமை கொள்கிறது.

    மக்கள் கண்ணீர் வடித்தார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் குழப்படைந்தனர். ஊழல் இல்லாமல் ஒரு கட்சி எவ்வாறு செயல்பட முடியும் என்பதை எதிர்க்கட்சிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் நம்மை தியாகம் செய்யலாம். ஆனால் நாட்டை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. ஊழல் குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சர் கைது- பதவி நீக்கம் செய்து பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை
    துப்பாக்கிச்சூடு தாக்குதலில் முகம் சிதைந்து ரின்கூ சிங் தனது பார்வை மற்றும் செவிப்புலனை இழந்தார்.
    உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த மாகாண சிவில் சர்வீஸ் அதிகாரி ரின்கூ சிங் ரஹீ. மாநில சமூக நலத்துறையில் அதிகாரியாக உள்ள ரின்கூ சிங், கடந்த 2008-ம் ஆண்டு முசாபர்நகரில் ஸ்காலர்ஷிப்பில் நடந்த 83 கோடி மோசடியை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.

    இந்த வழக்கில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு 4 பேருக்கு 10 ஆண்டுகளை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த மோசடி வெளியான உடனேயே, ரின்கூ தாக்கப்பட்டு ஏழு முறை சுடப்பட்டார். இதில் துப்பாக்கி குண்டு முகத்தில் பாய்ந்தது.  இந்த தாக்குதலில் அவரது முகம் சிதைந்து ரின்கூ சிங் தனது பார்வை மற்றும் செவிப்புலனை இழந்தார்.

    இதற்கிடையே, ரன்கூ சிங் அரசு நடத்தும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குனராக அவர் பல ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு கற்பித்தும் வருகிறார்.

    இந்நிலையில், சக மாணவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க ரன்கூ 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

    இதுகுறித்து ரின்கூ சிங் ரஹீ கூறியதாவது:-

    எனது மாணவர்கள் தன்னிடம் யுபிஎஸ்சி தேர்வை எழுதச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் தூண்டுதலால்தான் நான் தேர்வு எழுதினேன்.

    இதற்கு முன் 2004ம் ஆண்டில் நான் மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.

    என்னைப் பொறுத்தவரை பொது நலன் முக்கியம். சுயநலத்திற்கும் பொது நலனுக்கும் இடையே எப்போதாவது மோதல் ஏற்பட்டால் நான் பொது நலனைத்தான் தேர்ந்தெடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. திருப்பதியில் கடந்த 4 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது
    ×