search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "apple iPad"

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


    ஆப்பிள் நிறுவனம் ஐபேட் தயாரிப்பை சீனாவிலிருந்து வியட்நாமிற்கு மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களின் உற்பத்தியை சீனாவிற்கு வெளியே மாற்றுவது இதுவே முதல் முறை. ஆப்பிள் தனது ஐபாட் உற்பத்தியை வியட்நாமிற்கு மாற்றுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஷாங்காய் மற்றும் நாட்டின் பிற நகரங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தான் என கூறப்படுகிறது.

    சப்ளை தடைகளைத் தவிர்ப்பதற்காக அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்ட உதிரிபாகங்களினை கூடுதலாக  உருவாக்குமாறு ஆப்பிள் அதன் சப்ளையர்களைக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஷாங்காய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் வழக்கமான வணிகம் பாதிக்கின்றனவாம். அதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

     ஆப்பிள் ஐபேட்

    சில காலமாக, ஆப்பிள் நிறுவனம் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கப் பார்க்கிறது. அடுத்த சாத்தியமான சந்தைக்கு வியட்நாம் மிகவும் பொருத்தமான தேர்வாக உள்ளதால் அதன் உற்பத்தியை அங்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    வியட்நாம் சீனாவை விட ஆப்பிளின் சிறந்த தேர்வாக இருப்பதற்கு முதன்மைக் காரணம், ஐபேட் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான உழைப்பு மற்றும் பிற வளங்களைப் பெறுவது எளிது என்பது தான்.

    ×