என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தொழில்நுட்பச் செய்திகள்
தொழில்நுட்பச் செய்திகள்
டெஸ்லாவில் உள்ள அனைவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணிநேரம் அலுவலகத்தில் செலவிட வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கிடம் இருந்து, அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த வாரம் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்ப்ட்டிருந்தது. அதில் “டெஸ்லாவில் உள்ள அனைவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணிநேரம் அலுவலகத்தில் செலவிட வேண்டும்" என்றும், "நீங்கள் வரவில்லை என்றால், நீங்கள் ராஜினாமா செய்துவிட்டீர்கள் என்று கருதுவோம்" என்றும் குறிப்பிட்டிருந்தனர். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய திட்ட மேலாண்மை மென்பொருள் தயாரிப்பாளரான அட்லாசியன் கம்பெனியில் இணை நிறுவனரான, ஸ்காட் ஃபார்குஹார், எலான் மஸ்க்கின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த உத்தரவு "1950 களில் இருந்ததைப் போன்றது" என்று கேலி செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
எங்கிருந்தும் வேலை செய்யலாம் என்கிற கொள்கை அமெரிக்காவை சேர்ந்த கம்பெனிகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது அட்லாசியன் கம்பெனியின் வளர்ச்சிக்காக 2026ம் ஆண்டுக்குள் 25 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், டெஸ்லா ஊழியர்கள் யாரேனும் ஆர்வமாக உள்ளீர்களா? எனவும் ஸ்காட் ஃபார்குஹார் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒன்பிளஸ் போனாக மறுபெயரிடப்படும் ஓபோ A57 ஆனது கலர்OS க்கு பதிலாக ஆக்சிஜன் OS 12.1 உடன் வரும் என கூறப்படுகிறது.
ஓபோ A57 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் அந்த போனை ஒன்பிளஸ் நிறுவனம் மறுபெயரிட்டு குறிப்பிட்ட சந்தைகளில் குறைந்த விலையில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஓபோ A57 OnePlus பிராண்டிங்கின் கீழ் FCC சான்றிதழைப் பெற்றுள்ளது, இது தோற்றத்தில் ஒன்பிளஸ் போனைப் போல இருந்தாலும் அதன் உட்புறத்தில் சில மாற்றங்களை செய்து வெளியிட ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
ஒன்பிளஸ் போனாக மறுபெயரிடப்படும் ஓபோ A57 ஆனது கலர்OS க்கு பதிலாக ஆக்சிஜன் OS 12.1 உடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் இது 5000mAh பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அந்த ஸ்மார்ட்போன் ஓபோவுக்கு பதிலாக ஒன்பிளஸ் லோகோவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் வாய்ப்புகள் உள்ளன.
ஓபோ A57-ன் விலை ரூ.13,500 ஆக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மறுபெயரிடப்பட்டு வெளியிடப்பட உள்ள ஒன்பிளஸ் போனும் கிட்டத்தட்ட அதே விலையில், அதாவது ரூ.15 ஆயிரத்துக்கும் கீழ் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு IAMAI எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு குறித்த உத்தரவை விமர்சித்துள்ளது.
இந்த மாத இறுதியில் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்திய இணைய பாதுகாப்பு விதிகள் "நம்பிக்கையை விட அச்சத்தின் சூழலை" உருவாக்கும், உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு அரசாங்கத்தை எச்சரித்துள்ளது, விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஒரு வருட தாமதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பேஸ்புக், கூகுள் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI), இந்த வாரம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு குறித்த உத்தரவை விமர்சித்துள்ளது.
மற்ற மாற்றங்களுக்கிடையில், இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் (CERT) உத்தரவின்படி, தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுபோன்ற சம்பவங்களைக் கவனித்த ஆறு மணி நேரத்திற்குள் தரவு மீறல்களைப் புகாரளிக்க வேண்டும் மற்றும் ஆறு மாதங்களுக்கு ஐடி மற்றும் தகவல் தொடர்பு பதிவுகளை பராமரிக்க வேண்டும் என அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை 72 மணிநேரமாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. சர்வதேச அளவில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT), அமேசான் மற்றும் மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) போன்ற கிளவுட் சேவை வழங்குநர்களை, நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகும், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு தங்கள் வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் IP முகவரிகளைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய உத்தரவுகள் "பெரிய" பாதிப்பை ஏற்படுத்தலாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்ப்ட்டு உள்ளது.
அதிக அளவு பேட்டரி திறன் கொண்ட மெலிதான 5ஜி ஸ்மார்ட்போனாக ஒபோ K10 5ஜி இருக்கும் என்று ஓபோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓபோ K10 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வருகிற ஜூன் 8 ஆம் தேதி வெளியிட உள்ளதாக ஓபோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட K10 இன் 4ஜி மாடல் முதல் 15 நாட்களில் 1,00,000 யூனிட்கள் விற்பனை ஆனதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட K10 5ஜி மாடலிலிருந்து இது வேறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இது மிகவும் மெலிதான வடிவமைப்பு மற்றும் ஸ்ட்ரெய்ட் எட்ஜ் டிசைன் ஆகியவற்றை கொண்டது. மேலும் பின்புறத்தில் கைரேகை மற்றும் கீறல்-எதிர்ப்பு திறன் கொண்ட பின்புற வடிவமைப்பை இந்த ஃபோன் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிக அளவு பேட்டரி திறன் கொண்ட மெலிதான 5ஜி ஸ்மார்ட்போனாக ஒபோ K10 5ஜி இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
6.56″HD+ IPS LCD திரை, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி யுஎஃப்எஸ் 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், டூயல் எல்இடி ப்ளாஷ், 8 மெகாபிக்சல் முன் கேமரா, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 3.5 மிமீ இயர்போன் ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 7.9 மிமீ தடிமன், 190 கிராம் எடை, 33W வேகமான சார்ஜிங்குடன் கூடிய 5000mAh பேட்டரி ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருக்கும்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் 8T எனும் ஃபிளாக்ஷிப் போனை கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது அந்த போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி அந்த போன் தற்போது ரூ. 28,999-க்கு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் விற்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அறிமுகமான புதிதில் அதன் விலை ரூ.42,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து 4 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.38,999 க்கு விற்பபை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விலை மேலும் ரூ.10 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.28,999-க்கே கிடைக்கிறது.
அதன்படி 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி உடன் கூடிய ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட் போன் ரூ.28,999-க்கும், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி உடன் கூடிய மாடல் ரூ.31,999-க்கும் கிடைக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் லூனார் சில்வர் மற்றும் ஆக்வாமெரைன் கிரீன் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8T ஆனது முதன்மையான குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்டையும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,500 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. பின்புறம் குவாட் கேமரா அமைப்பை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இது 30 ஆயிரத்திற்கும் கீழ் கிடைப்பது நல்ல ஆஃபராக பார்க்கப்படுகிறது.
டிக்டாக் நிறுவனம் சமீபத்தில் அதன் வீடியோ நீளத்தை 3 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக மாற்றி இருந்தது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமிலும் தற்போது வீடியோவின் நீளம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு அப்டேட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. டிக்டாக் மற்றும் ஸ்னாப்சாட் போன்றவற்றின் வலர்ச்சியைத் தடுக்கவே அந்நிறுவனம் இதனை செய்து வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் மேலும் சில புதிய அம்சங்களை வழங்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது, குறிப்பாக அதன் ரீல்ஸில் மாற்றங்களை செய்துள்ளது.
முன்னதாக ஸ்டோரிஸில் பல்வேறு ஸ்டிக்கர்களை பயன்படுத்தும் வசதியை வைத்திருந்த அந்நிறுவனம் தற்போது ரீல்ஸிலும் ஸ்டிக்கர்களை பயன்படுத்தும் வண்ணம் அப்டேட் செய்துள்ளது. இது பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் டிக்டாக் நிறுவனம் சமீபத்தில் அதன் வீடியோ நீளத்தை 3 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக மாற்றி இருந்தது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமிலும் தற்போது வீடியோவின் நீளம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இதற்கு முன்னர் 60 நொடிகள் வரை நீளமுள்ள வீடியோக்களை பதிவிட முடியும். ஆனால் தற்போது அதன் நீளத்தை 90 நொடிகளாக அதிகரித்து உள்ளனர்.
அதேபோல் டெம்பிளேட்டில் சில மாற்றங்களை மெட்டா நிறுவனம், செய்துள்ளது. இந்த மாற்றம் பயனர்கள் ஈஸியாக வீடியோ மற்றும் ஆடியோக்களை சிங்க் செய்ய உதவும் என கூறப்படுகிறது.
தொழிற்சங்க முயற்சிகளின் எழுச்சி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்கொள்வதால் ஆப்பிள் தனது மணிநேர அமெரிக்க ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தியுள்ளது.
தொழிற்சங்கமயமாக்கலை நோக்கிய உந்துதலுக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் சில்லறை ஊழியர்களுக்கான பணி அட்டவணையை மாற்றி உள்ளது. வரவிருக்கும் மாதங்களில் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்று ஊழியர்களிடம் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ஷிப்டுகளுக்கு இடையிலான குறைந்தபட்ச நேரத்தை 10 மணிநேரத்திலிருந்து 12 மணிநேரமாக நீட்டிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், ஐபோன் தயாரிப்பாளர் ராய்ட்டர்ஸிடம் தனது அமெரிக்க ஊழியர்களுக்கான ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு 22 டாலர். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 1,700 அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்துவதாகத் தெரிவித்திருந்தது.
தொழிற்சங்க முயற்சிகளின் எழுச்சி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்கொள்வதால் ஆப்பிள் தனது மணிநேர அமெரிக்க ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் மணிநேர ஊழியர்களுக்கான ஆரம்ப ஊதியம் 22 டாலர் ஆக (தோராயமாக ரூ. 1,700) உயரும் என கூறப்படுகிறது. இது 2018 இல் இருந்ததை விட 45 சதவீதம் அதிகமாகும் என்று ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதலில் நேவியர் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள மூன்று தளங்களில் மட்டும் சுமார் 40 ரோபோக்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளன.
கிளவுட் அடிப்படையில் இயங்கும் தன்னாட்சி ரோபோக்களுக்கான முதல் தனியார் 5ஜி வணிக நெட்வொர்க் சேவையை சாம்சங் நிறுவனம் கட்டமைத்துள்ளது. நேவியர் கிளவுட் நிறுவனத்துடன் இணைந்து தென் கொரியாவின் முதல் தனியார் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது சாம்சங் நிறுவனம்.
நேவியர் நிறுவனத்தின் புதிய இரண்டாவது தலைமையகம் மற்றும் சாம்சங்கின் நெட்வொர்க் தீர்வு மையம் ஆகிய இடங்களில் இந்த கிளவுட் அடிப்படையிலான தன்னாட்சி மொபைல் ரோபோக்கள் இந்த மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த புதிய சேவையானது, சியோலில் உள்ள நேவியரின் தலைமையகம் முழுவதும் பயணிக்க உள்ளது. அங்கு, பேக்கேஜ் டெலிவரி, காபி டெலிவரி மற்றும் ஊழியர்களுக்கு மதிய உணவு பெட்டி விநியோகம் ஆகியவற்றை வழங்க இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
1784 என்ற எண்ணை அழைத்தால் ரோபோவின் உதவி கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முதலில் நேவியர் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள மூன்று தளங்களில் மட்டும் சுமார் 40 ரோபோக்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள், 36-மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான ரோபோக்களை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டு உள்ளனர்.
அனைத்து ரோபோக்களும் கிளவுட் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளன, அவை தனித்தனியாக செயல்படும் வண்ணம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோக்கள் அனைத்தும் சாம்சங்கின் 5ஜி நெட்வொர்க் மூலம் இயங்க உள்ளன. இதன்மூலம் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் ரோபோக்களை இயக்க முடியும் என கூறப்படுகிறது.
உலகளவில் AMOLED டிஸ்பிளே உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் இந்தியாவில் pOLED டிஸ்பிளே உடன் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோட்டோ g82 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அந்த போன் வருகிற ஜூன் 7-ந் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளதாக மோட்டோரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்த விலையில் 50MP கேமரா வசதியுடன் அறிமுகமாகும் முதல் போன் இதுவாகும்.
உலகளவில் AMOLED டிஸ்பிளே உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் இந்தியாவில் pOLED டிஸ்பிளே உடன் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 13 5ஜி பேண்ட் ஆதவுடன் இயங்கும் திறன் கொண்டதாகும்.
6ஜிபி ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 695 SoC, ஆண்ட்ராய்டு 12, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், OIS உடன் 50 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் + டெப்த் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை இந்த போனில் உள்ளன. மேலும் 30W டர்போ சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
மோட்டோ g82 5ஜி ஸ்மார்ட்போன் மீட்டியோரைட் கிரே மற்றும் ஒயிட் லில்லி ஆகிய இரு வண்ணங்களில் விற்பனைக்கு வர உள்ளது. அடுத்த செவ்வாய் கிழமை இந்த போன் அறிமுகம் செய்யப்படும்போது இதன் விலை என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளமுடியும். பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலமாகவும் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது.
விரைவில் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை ஒன்பிளஸ் வெளியிடும் என கூறப்பட்டு வந்தது. ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு 2022ம் ஆண்டு பிசியான ஆண்டாக இருந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அந்த நிறுவனம் தொடர்சசியாக போன்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்கள் இந்த ஆண்டு இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன.
அடுத்ததாக அந்நிறுவனம் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை வெளியிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலாக ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு வெளியாகும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்ஷிப் போனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் கேமராக்களைப் பொறுத்தவரை எந்தவித மாற்றமும் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் LDRR5 ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். உடன் வரலாம். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த போன் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ E32s ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மோட்டோரோலா மோட்டோ E32 போன்ற வடிவமைப்பைப் கொண்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ E32s ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை ரூ. 9,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜியோமார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோரோலா மோட்டோ E32s ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மோட்டோரோலா மோட்டோ E32 போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்லேட் கிரே மற்றும் மிஸ்டி சில்வர் ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது.
மோட்டோரோலா மோட்டோ E32s வலதுபுறத்தில் வால்யூம் ராக்கரைக் கொண்டுள்ளது, பவர் பட்டனுடன் கைரேகை ஸ்கேனரும் இணைக்கப்பட்டுள்ளது. இடது பக்கத்தில் ஒரு சிம் ட்ரே உள்ளது. இதன் கீழ் பகுதியில் மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் கிரில் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யு.ஸ்.பி. டைப் சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மோட்டோ E32s மாடலில் 6.5-இன்ச் HD+ IPS LCD பேனலைக் கொண்டுள்ளது. மேலும் இது 3GB/4GB ரேம் மற்றும் 32GB/64GB மெமரி வெரியன்டில் கிடைக்கிறது. ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிரசாசர் கொண்ட மோட்டோ E32s ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 சிரீஸ் அதிகளவு பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோவில், சுழலும் பெசல்கள் இருக்காது என கூறப்படுகிறது. கடைசியாக வெளிவந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4ல் சுழலும் பெசல்கள் இடம்பெற்று இருந்தன. இனி வரும் ஸ்மார்ட் வாட்ச்களில் தங்களது கிளாசிக் மாடலை தவிர்க்க சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
கேலக்ஸி வாட்ச் 4 சீரிசை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், கேலக்ஸி Z ஃபோல்ட் 3 வகை ஸ்மார்ட்போன்களுடன் சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதே போல் தான் தங்களது அடுத்த தயாரிப்பான கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸை இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் கேலக்ஸி Z ஃபோல்ட் 5 வகை ஸ்மார்ட்போன்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 சிரீஸ் அதிகளவு பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, 40mm மாடல் 276mAH பேட்டரி உடனும், 44mm மாடல் 397mAH பேட்டரி உடனும் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சபையர் கிளாஸ் மற்றும் டைட்டானியம் பாடி உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X