search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம்"

    கர்நாடகத்தில் இன்று பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை 
    குறைந்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தியும், இன்று ஒருநாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுவதாக டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    மேலும் கடந்த 2017 ஆண்டில் இருந்து இதுவரை கமிஷன் தொகை உயர்த்தப்படவில்லை எனவும், அதை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

    இன்றைய போராட்டத்தில் தமிழகம் கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்பட  24 மாநிலங்களில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடகத்தில் இன்று பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று வெளியான தகவலை அம்மாநில பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.  

    எண்ணெய் கிடங்குகளில் இருந்து எரிபொருள் கொள்முதல் ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாகவும், ஆனால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×