search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Cricket"

    • டெல்லி அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றது.
    • ஜார்க்கண்ட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது.

    புதுடெல்லி:

    ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சென்னையில் நடைபெற்ற குரூப்-பி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அசாமை வென்றது. முதலில் ஆடிய தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 540 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய அசாம் அணி 266 ரன்களில் ஆல் அவுட் ஆகி, பாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து இரண்டாம் இன்னிங்சை ஆடிய அசாம், 204 ரன்களில் சுருண்டது. தமிழகம் தரப்பில் அஜித் ராம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    குரூப்-பி பிரிவில் உள்ள டெல்லி- மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் மும்பை 293 ரன்கள் சேர்த்தது. டெல்லி 369 ரன்ககள் குவித்தது. வைபவ் ராவல் 114 ரன்கள் விளாசினார். இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணி 170 ரன்களில் சுருண்டது. கேப்டன் ரகானே 51 ரன்களும், தனுஷ் 50 ரன்களும் (நாட் அவுட்) எடுத்தனர். டெல்லி தரப்பில் திவிஜ் மெஹ்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    இதனால் டெல்லி அணியின் வெற்றிக்கு 95 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எளிதில் எட்டிய டெல்லி அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதேபோல் கர்நாடகா, கேரளா அணிகளுக்கிடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. ராஜஸ்தான் அணி சத்தீஸ்கர் அணியை 167 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கோவா அணி சர்வீசஸ் அணியை வீழ்த்தியது. ஜார்க்கண்ட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது.

    ×