search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Vishwakarma Artisans Association"

    • தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லும்போது, குறும்பர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்று பாரிவேந்தர் உறுதியளித்தார்.
    • அனைவரும் டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் எம்.பியாக வெற்றிபெறச் செய்வோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில், தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தருக்கு, பொதுமக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. மேலும், டாக்டர் பாரிவேந்தருக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, திருச்சி SRM ஹோட்டல் வளாகத்தில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மத்திய மண்டல தலைவர் ராஜேந்திரன், திருச்சி மாவட்ட தலைவர் நித்யா நடராஜன், செயலாளர் உமாபதி மற்றும் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் தொகுதியில் செய்த நற்பணிகள் அடங்கிய புத்தகத்தை, டாக்டர் பாரிவேந்தர், விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

    குறும்பர் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து S.T. பிரிவுக்கு மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று, பெரம்பலூர் மக்களவைத் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்துள்ளார்.

    இந்திய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் தொகுதியில் IJK சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு திரட்டி வருகிறார். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தர், குறும்பர் சமுதாய மக்களின் குல தெய்வமாக விளங்கும் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலுக்கு வருகை தந்தபோது, அவருக்கு, தமிழ்நாடு குறும்பர் முன்னேற்ற சங்கத்தின் செயல் தலைவர் உதகை செங்குட்டுவன் மற்றும் கோயில் நிர்வாக தலைவர் தர்மராஜ் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனைத்தொடர்ந்து, கோயிலில் மகாலெட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மகாலெட்சுமி அம்மனை டாக்டர் பாரிவேந்தர் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தார். டாக்டர் பாரிவேந்தருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், குறும்பர் சமுதாய மக்களின் விருப்பத்தின் பேரில் அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார். மிகவும் தொன்மையான இக்கோயிலில், பல பேருக்கு இலவசமாக திருமணம், அன்னதானம் வழங்கப்பட்டு வருவதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். குறும்பர் சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான MBC யிலிருந்து ST பழங்குடியினர் வகுப்புக்கு மாற்றுவதற்கான கோப்புகள், மத்திய அரசிடம் உள்ளதாக தெரிவித்த அவர், தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லும்போது, குறும்பர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்று பாரிவேந்தர் உறுதியளித்தார்.

    டாக்டர் பாரிவேந்தரின் இலவச உயர் கல்வி திட்டத்தால் தன்னை போன்ற ஏழை எளிய மக்களின் கனவு நனவாகியதாக தெரிவித்துள்ள SRM பல்கலைக்கழகத்தில் பயிலும் துறையூரை சேர்ந்த மாணவி அகல்யா, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் எம்.பியாக வெற்றிபெறச் செய்வோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    2019 தேர்தலில் வெற்றி பெற்ற டாக்டர் பாரிவேந்தர், மகாலெட்சுமி திருக்கோயிலில் அஷ்டலட்சுமி பிரதிஷ்டை செய்தபோது நன்கொடை வழங்கியதாகவும், தங்கள் வாக்குகள் அனைத்தும் டாக்டர் பாரிவேந்தருக்குதான் என்றும் கலைச்செல்வி என்பவர் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து பேசிய ராகவி என்பவர், நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் சமுதாய மக்கள் டாக்டர் பாரிவேந்தரின் வெற்றிக்கு பாடுபடுவதாகவும், தங்களுடைய ஆதரவு அவருக்குதான் எனவும் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், I J K முதன்மை அமைப்புச் செயலாளர் S.S.வெங்கடேசன், முதன்மைச் செயலாளர் சத்தியநாதன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×