என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tamilnadu ministers
நீங்கள் தேடியது "tamilnadu ministers"
தமிழக அமைச்சர்கள் பலர் இஸ்ரோவை மிஞ்சும் விஞ்ஞானிகளாக உள்ளனர் என திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார். #dindigulleoni #tnministers
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூரில் நகர தி.மு.க. சார்பில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துறைமயூர் நகர செயளாளர் முரளி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தர்மன் ராசேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயளாளர் அண்ணாதுரை வரவேற்றார். மாவட்ட செயளாளர் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் நேரு எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய கே.என். நேரு, தி.மு.க. ஆட்சி காலத்தில் துறையூருக்கு காவிரிகூட்டு குடிநீர் திட்டம், துறையூர் பைபாஸ் சாலை திட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றப்பட வில்லை. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் துறையூர் பகுதி விவசாயத்தில் தன் நிறைவு பெறும் வகையில் நீர்பாசன திட்டம் மேற்கொள்ளப்படும் என்றார்.
பின்னர் பேசிய சிறப்பு பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழகத்தில் தற்போது பபூன்களின் ஆட்சி நடைபெறுகிறது. எந்த அமைச்சர் என்ன பேசுகிறார் என்பது தெரிவில்லை. தமிழக அமைச்சர்கள்கள் பலபேர் இஸ்ரோவை மிஞ்சும் வகையில் விஞ்ஞானிகளாக உள்ளனர்.
டெல்லியில் இருந்து பஸ்சில்தான் டெங்கு கொசு வருகிறது என கூறும் அமைச்சர், தெர்மாகூல் போட்டால் அணையின் நீர் வற்றாது என கூறும் அமைச்சர் பிரதமர் யார் என்றே தெரியாமல் பேசும் அமைச்சர் கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கூறும் முதலமைச்சர் என இங்குதான் உள்ளனர். இவர்களை சகித்துக் கொண்டு வாழ்வது தமிழக மக்களின் பெருந்தன்மையை காட்டுகிறது என்றார்.
கூட்டத்தில் கஸ்டம்ஸ் மகாலிங்கம், ஜெயக்குமார் சிறுநாவலூர் சுப்ரமணியன் மாவட்ட இளைஞரனி துணை அமைப்பாளர் கண்ணண், உப்புலியபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜசேகர், மதியழகன், முன்னாள் கவுன் சிலர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். #dindigulleoni #tnministers
×

X