search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu students"

    நீட் தேர்வு குறித்து முக ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் அளித்த தமிழிசை, நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் அதிக அளவில் பயன் அடைவதாக கூறினார். #TamilisaiSoundararajan #BJP #NEETExam
    சென்னை:

    பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி உருவாகும் என்று கூறப்படுகிறது. இதை விமர்சித்து வரும் தி.மு.க. ‘நீட்’ தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். அதை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கூறியது.

    இதற்கு பதில் அளித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு பின்பு தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்பிற்கு அதிக அளவில் தமிழக மாணவர்கள் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மத்திய தொகுப்பிற்கு தமிழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்வானார்கள் என்பதே உண்மை. இந்த நிலை தற்போது மாறி இருக்கிறது.

    சமீப காலத்தில் வெளிவந்த முதுநிலை மருத்துவபட்ட மேற்படிப்பில் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் முன்னணியில் இருப்பது தமிழகத்திற்கு பெருமை.

    இந்தாண்டு இந்திய அளவில் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதிய 1,43,148 பேரில் 79,633 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து தேர்வெழுதிய 17,067 பேரில் 11,121 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மராட்டிய மாநிலத்தில் தேர்வெழுதிய 15,451 பேரில் 7,441 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் தேர் வெழுதிய 15,216 பேரில் 9,219 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆந்திராவில் தேர்வு எழுதிய 10,885 பேரில் 6,323 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

    உத்தர பிரதேசத்தில் தேர்வெழுதிய 9,712 பேரில் 4,173 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்திய அளவில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 79,633 பேரில் 11,121 பேர் என்று சொன்னால் இந்திய அளவில் 1:7 என்ற விகிதத்தில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதுநிலைப் பட்டபடிப்பிற்கு தேர்வாகி இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் கோடிகள் இல்லாமல் தகுதியின் அடிப்படையில் தான் சேரப்போகிறார்கள்.



    நீட் தேர்வால் சாமானியர்களும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பு பயில முடியும் என்பதே இன்றைய நிதர்சனம். நீட் தேர்வால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பு விலை பேசி விற்கப்படாமல் தகுதி, மதிப்பெண் அடிப்படையில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் சாமானியர்களும் மருத்துவராக முடிகிறது.

    நீட் தேர்வை பொதுமக்களும், மாணவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டதால் முன்பு இருந்ததை விட ஏறத்தாழ 2 மடங்கு மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளார்கள். இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த ஆண்டுகளில் நடந்த நிலையில் தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் மத்திய அரசு நீட் தேர்விற்கு தமிழகத்திற்கு 1 வருடம் விலக்கு அளித்தது.அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படித்தான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.

    நீட் தேர்வு கருத்துருவாக்கம் திமுக காங்கிரஸ் கூட்டணியின் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் தான் உருவானது.அதன் இறுதிவடிவம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மோடி அவர்கள் அரசாங்கம் நடை முறைப்படுத்த வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP #NEETExam
    ×