search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tangalan First Single"

    • சமீபத்தில் தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.

    இந்நிலையில் தங்கலான் படத்தின் 'மினிக்கி மினிக்கி' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகி உள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    ×