என் மலர்
நீங்கள் தேடியது "temple festival conflict"
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியில் பட்டாளத் தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது அதே பகுதி பகவதிநகரை சேர்ந்த சின்னசாமி, பாரதி, பாலசந்திரன் உள்ளிட்ட சிலர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். இதை ஊர்வலத்தில் வந்த அழகர் (38) என்பவர் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கும்பல் அழகரை தாக்கி சரமாரியாக தாக்கினர். ஊர்வலத்தில் வந்த காளிதாஸ் மனைவி நாகலட்சுமி என்வரையும் கும்பல் தாக்கியது. இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இதுபற்றி தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சின்னசாமி, பாரதி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் தங்கபாண்டி, பாண்டிகார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
மதுரை:
மதுரை திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியில் முனியாண்டி கோவில் விழாவையொட்டி ஆடல்- பாடல் நிகழ்ச்சி நடந்தது. தொட்டியபட்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ரசித்தனர்.
அப்போது உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கும், தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த அய்யலுராஜ் மகன் அருண் (வயது 19) என்பவர் ‘‘எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்’’என்று திருமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
ஆனாலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய தயக்கம் காட்டியதாக தெரிகிறது. இதையடுத்து புதுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் புதுப்பட்டி கோஷ்டி மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொட்டியப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ் (19), மார்நாடு மகன் ஜெகதீஸ்வரன் (20), அழகுமலை மகன் லட்சுமணன் (23) ஆகிய 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தவிர தப்பி ஓடி தலைமறைவான பிரிய தர்ஷன், கண்ணன், தர்மதுரை, திருமேனி, முருகேசன், முரளி ஆகிய 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






