search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tharun agarwal"

    தேவைப்பட்டால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆய்வு குழு தலைவர் தருண் அகர்வால் தெரிவித்துள்ளார். #ThoothukudiSterlite #TarunAgarwal
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று தூத்துக்குடிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் கொட்டப்படும் இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது மதிமுக பொது செயலாளர் வைகோவும் உடனிருந்தார். 

    இந்நிலையில், ஆய்வு குழுவினர் இன்று மாலை தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பினர். சென்னையில் தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழு தலைவர் தருண் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஸ்டெர்லைட் ஆலை, கிராமங்கள், கழிவு கொட்டப்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு கருத்துக்களையும் முழுமையாக கேட்டறிந்த பின்னரே, பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    தேவைப்பட்டால் ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சென்னையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். #ThoothukudiSterlite #TarunAgarwal
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு இன்று மாலை வருகை தந்த 3 பேர் கொண்ட குழுவினர் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். #ThoothukudiSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

    இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் இன்று மாலை தூத்துக்குடிக்கு வருகை தந்தனர்.

    இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு வந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தூத்துக்குடியில் நாளை காலை 11.30 மணிக்கு இந்தக் குழு மக்களிடம் கருத்து கேட்கிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கும் கூட்டத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். 2 மணி நேரம் கூட்டம் நடக்கும் என தெரிவித்தார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை முதல் தாமிர தாதுக்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiSterlite
    ×