என் மலர்
நீங்கள் தேடியது "tharun teja"
- தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அஸ்வின்ஸ்'.
- இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
தரமணி, ராக்கி ஆகிய படங்களில் நடித்த வசந்த் ரவி தற்போது நடித்து வரும் திரைப்படம் 'அஸ்வின்ஸ்' (ASVINS). இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான தருண் தேஜா இயக்குகிறார். இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து உருவாகும் சைக்கலாஜிக்கல்- ஹாரர் வகையைச் சேர்ந்தது.
இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்துள்ளார். இப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர் வசந்த் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Happy Birthday @iamvasanthravi, very happy to launch the teaser of your movie 'ASVINS', Produced by @SVCCofficial and Directed by @taruntejafilm
— Dhanush (@dhanushkraja) April 18, 2023
TAMIL: https://t.co/c9PgZewIZ0
TELUGU: https://t.co/a5DrZqqrVz@BvsnP @praveen2000#Asvins #AsvinsTeaser #HBDVasanthRavi pic.twitter.com/gYd2du85KF
- இயக்குனர் தருண் தேஜா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'அஸ்வின்ஸ்'.
- இப்படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கிறார்.
தரமணி, ராக்கி ஆகிய படங்களில் நடித்த வசந்த் ரவி தற்போது நடிக்கும் திரைப்படம் 'அஸ்வின்ஸ்' (ASVINS).இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான தருண் தேஜா இயக்குகிறார். இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து உருவாகும் சைக்கலாஜிக்கல்- ஹாரர் வகையைச் சேர்ந்தது.
அஸ்வின்ஸ் பட போஸ்டர்
இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்துள்ளார். பாபிநீடு பி இந்தப் படத்தை வழங்குகிறார் மற்றும் இணைத் தயாரிப்பாளராக பிரவீன் டேனியல் உள்ளார். இப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விஜய் சித்தார்த் இசையமைக்கும் இப்படத்திற்கு எட்வின் சகே ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் வெங்கட் ராஜன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.