search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The Maha Shivratri festival"

    • பூலாங்கிணர் கிராமத்தில் திருச்சப்பரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    • கிராமிய கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம் என பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மலைமேல் பஞ்சலிங்க சுவாமிகள், அருவி, மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் என ஆன்மீக சிறப்பு பெற்ற தலமாக உள்ளது.

    இக்கோவிலில் சிறப்பு அம்சமாக மகா சிவராத்திரியன்று மும்மூர்த்திகளின் மூலாலய கோபுரமாக திருச்சப்பரம் நிறுவப்படுவது பாரம்பரியமாக உள்ளது.நடப்பாண்டு மகாசிவராத்திரி விழா வருகிற 17ந் தேதி தொடங்குகிறது. அன்று இரவு 8 மணிக்கு பூலாங்கிணர் கிராமத்தில் திருச்சப்பரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    தொடர்ந்து கிராமங்கள் வழியாக திருச்சப்பர ஊர்வலம் நடக்கிறது. வழியோர கிராமங்களில் தானியங்கள் பழ வகைகள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 18ந் தேதி மாலை 4 மணிக்கு திருச்சப்பரம், திருமூர்த்திமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு மூலவர் கோபுரமாக எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 8மணிக்கு முதற்கால யாக பூஜையும், இரவு 10மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.வருகிற 19ந் தேதி அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 5 மணிக்கு சிறப்பு அலங்காரம், 16 தீப தரிசனமான சோடச உபசார தீபாராதனை நடக்கிறது.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் இரவு முழுவதும் பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம் என பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    ×