search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The World Best show"

    அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ பட்டத்துடன், 7 கோடி ரூபாய் பரிசு வென்ற சென்னை சிறுவனை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்தினார்.
    சென்னை:

    அமெரிக்காவில் ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதை புகழ்பெற்ற ஹாலிவுட் தொகுப்பாளர் ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்குகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சென்னையை சேர்ந்த பியானோ கலைஞரான 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டார். தனது அசாத்திய திறமையால் பியானோ வாசித்த லிடியன், ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் இந்த போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் லிடியன் வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில், 2 பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து பட்டம் வென்ற லிடியனுக்கு ரூ.7 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சென்னையில் நடந்த பாராட்டு விழாவில், ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ பட்டம் வென்ற லிடியனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்தினார். பின்னர் லிடியனுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

    லிடியனின் தந்தை சதீஷ் வர்ஷன் ஒரு இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லிடியனுக்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர்கள் சூர்யா, மாதவன் உள்பட திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    ×