என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thiruvananthapuram Airport"
- 1932-ல் விமான நிலையம் நிறுவப்பட்ட பின்னரும் இந்த சடங்கு தொடர்கிறது.
- ஆண்டுக்கு இரு முறை விமான இயக்கத்தை நிறுத்தி வைத்தும், அட்டவணையை மாற்றியமைத்தும் வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவில் அருகே அமைந்து உள்ளது. இந்த கோவில் புனித நிகழ்வுக்காக ஆண்டுக்கு 2 முறை இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படுகிறது.
அதாவது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரும் 'ஐப்பசி ஆறாட்டு' மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வரும் பங்குனி விழாவுக்காக விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு விமான இயக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
அந்தவகையில் பத்மநாப சுவாமி கோவிலில் வருகிற 9-ந்தேதி 'ஐப்பசி ஆறாட்டு' விழா நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து சாமி சிலைகளை சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து சென்று அங்கு ஆறாட்டு நிகழ்ச்சி (புனித குளியல்) நடத்தப்படுகிறது.
இந்த சாமி ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையை கடந்து கடற்கரைக்கு செல்லும். எனவே அதற்காக விமான நிலையத்தில் விமான இயக்கம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம் ஆகும்.
அதன்படி இந்த ஆண்டும் வருகிற 9-ந்தேதி 5 மணி நேரம் விமான இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக விமான நிலையம் அறிவித்து உள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த விமான இயக்க நிறுத்தம் அமலில் இருக்கும் என கூறியுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பத்மநாப சுவாமி கோவில் ஊர்வலம் கடந்து செல்வதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஓடுபாதை ஆண்டுதோறும் 2 முறை மூடப்படுகிறது. சிலைகள் புனித நீராடுவதற்காக சங்குமுகம் கடற்கரையை அடைய தற்போதைய ஓடுபாதையில் ஊர்வலம் செல்லும் நடைமுறை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
1932-ல் விமான நிலையம் நிறுவப்பட்ட பின்னரும் இந்த சடங்கு தொடர்கிறது. இதற்காக ஆண்டுக்கு இரு முறை விமான இயக்கத்தை நிறுத்தி வைத்தும், அட்டவணையை மாற்றியமைத்தும் வருகிறது.
இது இந்த பிராந்தியத்தின் கலாசாரம் மற்றும் மரபுகள் அப்படியே தொடர்வதை உறுதி செய்கிறது.
இவ்வாறு விமான நிலையத்தின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்த விமான நிலையம் கட்டப்பட்டபோது, இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 363 நாட்கள் மக்களுக்காகவும், 2 நாட்கள் பத்மநாப சுவாமிக்காகவும் திறந்திருக்கும் என அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் கூறியிருந்தார்.
அதன்படி இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. மன்னர் காலம் முழுவதும் பின்பற்றப்பட்ட இந்த நடைமுறைகள் தற்போது அதானி குழுமம் விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஏற்றபிறகும் கூட தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வந்த பயணிகளை சுங்க இலாகாவினர் சோதனை செய்தனர்.
- உள்ளாடைக்குள் தங்கம் மறைத்து வைத்து கடத்தி வருவது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருட்கள் போன்றவை அடிக்கடி கடத்தி வரப்படுகின்றன. அவற்றை சுங்க இலாகாவினர் அவ்வப்போது மடக்கி பிடித்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவம் தொடர்ந்தே வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வந்த பயணிகளை சுங்க இலாகாவினர் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை பரிசோதித்தபோது எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று உடல் சோதனை நடத்தினர்.
அப்போது அவர் உள்ளாடைக்குள் தங்கம் மறைத்து வைத்து கடத்தி வருவது தெரியவந்தது. அவற்றை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் மற்றொரு பயணியும் உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 தங்க பிஸ்கட்டுகள், ஒரு தங்க நாணயம் உள்பட ரூ.33 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 3.46 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
- திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு 29 ஆயிரத்து 778 விமானங்கள் வந்துள்ளன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன. இதில் திருவனந்தபுரம் விமான நிலையம் பயணிகள் வருகை மற்றும் விமான சேவையில் புதிய சாதனையை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் முதல் கடந்த மாதம் (மார்ச்) வரையிலான கால கட்டங்களில் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக 4.4 மில்லியன் (44 லட்சம்) பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 3.46 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இதேபோல் விமான சேவையிலும் சாதனை படைத்துள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு 29 ஆயிரத்து 778 விமானங்கள் வந்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில் 24 ஆயிரத்து 213 விமானங்கள் இயக்கப்பட்டிருந்தன. தற்போது 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
விமான பயணிகள் சர்வதேச அளவில் ஷார்ஜாவுக்கும், உள்நாட்டில் பெங்களூரூவுக்கும் அதிக அளவில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழா 23-ந்தேதி நடக்க இருக்கிறது
- வருடத்திற்கு இரண்டு முறை குறிப்பிட்ட நேரத்தில் விமான சேவை நிறுத்தப்படும்
இந்தியாவில் எப்போதும் பரபரப்பாக செயல்படும் விமான நிலையங்களில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையத்தில் வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 9 வரை விமான சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழாவை முன்னிட்டு, இந்த விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய நிகழ்ச்சியாக அல்பாசி ஆராட்டு விழாவின்போது சாமி சிலை, ஷண்முகம் கடற்கரை கொண்டு செல்லப்பட்டு புனித நீராடல் நடத்தப்படும். விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாகத்தான் சாமி சிலை கொண்டு செல்லப்படும்.
விமான நிலையம் 1932-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதற்கு முன்னதாக பல நூற்றாண்டுகள் இந்த வழியாகத்தான் சாமி சிலை கொண்டு செல்லப்பட்டது. இதனால் வருடத்தில் இரண்டு நாட்கள் இந்த வழியாக, சாமி சிலையை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் வருகிற 23-ந்தேதி மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரை விமான சேவை நிறத்தப்படுகிறது.
இதைதொடர்ந்து, ஓமன் நாட்டிலிருந்து இன்று காலை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் வெகு துல்லியமாக சோதனையிட்டனர். அப்போது, ஒரு பயணியின் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பிஸ்கட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கடத்திவந்த நபரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்