என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tiruppur Corporation"
- தொழிலாளர்களை கழிப்பறையில் தங்க வைத்திருக்கிறது தி.மு.க. அரசு.
- தவறு செய்த அனைவரையும் தண்டிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தூய்மைப்பணிக்காக அழைத்து வரப்படும் நிலையில், அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், சத்தான உணவு, பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசு மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் கடமை ஆகும். ஆனால், வாழத்தகுதியற்ற, நாற்றம் வீசக்கூடிய அறையில் அவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அரசும், மாநகராட்சியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் பள்ளியின் கழிப்பறைக்குள் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியாதா? அப்படி தெரியவில்லை என்றால் மாநகராட்சி முற்றிலுமாக செயலிழந்து விட்டதாகத் தான் பொருள். இதுபோன்ற அபத்தமான விளக்கங்களின் மூலம் உண்மையை மறைத்து விட முடியாது.
அனைவருக்கும் சமூகநீதி வழங்கப்படுகிறது; அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன என்றெல்லாம் மூச்சுக்கு முன்னூறு முறை தம்பட்டம் அடித்துக் கொள்கிறது தி.மு.க. அரசு. ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக தொழிலாளர்களை கழிப்பறையில் தங்க வைத்திருக்கிறது தி.மு.க. அரசு. இதுவா சமூகநீதி? இது தொடர்பாக விசாரணை நடத்தி, தவறு செய்த அனைவரையும் தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 176 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
இதில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- திருப்பூர் மாநகராட்சியை திறன்மிகு மாநகராட்சியாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தினமும் 600 முதல் 700 டன் குப்பைகளை அகற்றி வருகிறோம். திடக்கழிவு மேலாண்மை 100 சதவீதம் செயல்படுத்த, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வழங்கும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்க வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில் குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை நோக்கி பணியாற்ற வேண்டும். தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் , சிக்கண்ணா அரசு கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் என மொத்தம் 176 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக அனைவரும் தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், கோவிந்தசாமி, மாநகர பொறியாளர் முகமது சபியுல்லா, மாநகர் நல அதிகாரி (பொறுப்பு) கார்த்திக், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்