என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tirupur Old Bus Stand"
- திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.36½ கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், பஸ் நிலைய பணிகளை ஆய்வு செய்தார்.
திருப்பூர் :
திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.36½ கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்துக்கு அருகில் ரூ.18 கோடியே 10 லட்சம் மதிப்பில் அடுக்குமாடி வாகன நிறுத்தமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பொலிவுபடுத்தப்பட்ட பஸ் நிலையத்தை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக திறப்பு விழா நடத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் மின்வாரியத்தின் சார்பில் மின் இணைப்பு மற்றும் மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளால் தாமதமாகி போனது.
இந்தநிலையில் 98 சதவீதம் பணிகள் நிறைவு பெற்று இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், பஸ் நிலைய பணிகளை ஆய்வு செய்தார்.மாநகராட்சி உதவி கமிஷனர்கள் உடனிருந்தனர். பஸ் நிலையத்துக்குள் உள்ள கடைகள், உணவகம், நகரும் படிக்கட்டு உள்ளிட்ட வசதிகளை ஒவ்வொன்றாக மேயர் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து விரைவில் திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.ஆய்வு குறித்து மேயர் தினேஷ்குமார் கூறும்போது, 'பஸ் நிலைய திறப்பு விழா விரைவில் நடைபெறும். இறுதிகட்டப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 98 சதவீதம் நிறைவடைந்து விட்டது என்றார்.
- நாளை காலை 6.15மணிக்கு மேல் 7. 45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை வேள்வி, கணபதி வழிபாடு, ஜப பாராயணம் நடைபெறுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள மேயர்கோவில் ஸ்ரீசோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரர்( ராகு கேது ஸ்தலம்) கோவிலில் நாளை 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15மணிக்கு மேல் 7. 45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை வேள்வி, கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், திரவியாஹூதி, வேதிக அர்ச்சனை, மூல மந்திர ஹோமம், ஜப பாராயணம் நடைபெற்றது.
காலை 8. 45 மணிக்கு விசேஷசந்தி, 11 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி ஆரம்பம், விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், திரவியாஹூதி, வேதிக அர்ச்சனை, வேத ஜப பாராயணம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு, மஹா பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல், இரவு 7.30 மணிக்கு தேவி ஸ்ரீயின் பரதநாட்டியம் நிகழ்ச்சி, 8 மணிக்கு திருப்பூர் ரஜினி செந்தில் வழங்கும் கொங்கு புகழ் மேஸ்ட்ரோ இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை 21ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, விநாயகர் வழிபாடு, புண்யாஹவாசனம், திரவியாஹூதி, காலை 5.45 மணிக்கு நாடி சந்தானம், காலை 6.45 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, காலை 7 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 7.31 மணிக்கு ஸ்ரீசோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஷ்வரர் பரிவார விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், 7.40 மணிக்கு ஸ்ரீ சோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரர் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கு செல்வராஜ் எம். எல்.ஏ., தலைமை தாங்குகிறார். பக்தர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்