search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvarur by election"

    திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும் என துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். #Tiruvarurbyelection #OPanneerSelvam

    தேனி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதற்கான மனுதாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வருகிற 10-ந்தேதி கடைசி நாளாகும்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. தினகரன் கட்சி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. சர்பில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனும், தினகரனின் அ.ம.மு.க. சார்பில் காமராஜூம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டு நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று நடந்த ஆட்சிமன்ற குழுவில் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்பட வில்லை.

    இந்த நிலையில் திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

    தேனியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஓ.பன்னீர் செல்வம் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளர் நாளை (7-ந் தேதி) காலை அறிவிக்கப்படுவார். தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தெரிவித்து வருகின்றனர். எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.கவே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tiruvarurbyelection #OPanneerSelvam

    திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கருத்து கேட்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #TiruvarurByelection #MKStalin
    சென்னை:

    திருவாரூர் தொகுதியில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. திமுக, அமமுக போன்ற கட்சிகளும் திருவாரூர் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.



    இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், திருவாரூர் தேர்தல் தொடர்பாக கருத்தினை பதிவிட்டுள்ளார்.

    அதில், “திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும்’’ வேண்டுகோள் விடுத்துள்ளார். #TiruvarurByelection #MKStalin
    திருவாரூர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். #TTVDhinakaran #Tiruvarurbyelection
    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின்பு அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ஈபிஎஸ் - ஓபிஎஸ் உடன் அமமுக இணைப்பு என்ற எண்ணமே எனக்கு இல்லை. என்னுடைய தற்போதைய எண்ணம் எல்லாம் திருவாரூர் தேர்தல் பற்றி மட்டுமே.



    திருவாரூர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறும்.

    திருவாரூர் தேர்தல் முடிவில் தமிழக மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran  #Tiruvarurbyelection
    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கி உள்ளதால் அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி உள்ளனர். #Tiruvarurconstituency #Tiruvarurbyelection
    திருவாரூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமி‌ஷன் கடந்த 31-ந்தேதி அறிவித்தது. இதனால் அன்று முதலே திருவாரூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது.

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆர்.டி.ஓ முருகதாஸ் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் திருமால் மற்றும் திருவாரூர் தாசில்தார் குணசீலி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் வேட்பு மனுதாக்கல் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று (3-ந்தேதி) முதல் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்காக இந்த அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பும், பேரிகார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் நடத்த விதிகளை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் துணை தாசில்தார், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வீடியோ கிராபர் இடம் பெற்றுள்ளனர். பறக்கும் படையில் மத்திய அரசு அலுவலர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.

    வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கி உள்ளதால், அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி உள்ளனர்.

    பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்கள் தேர்வில் இறங்கியுள்ளன. நேர்காணல் நடத்தி இந்த இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பிறகே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும்.

    தினகரன் கட்சியிலும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தினகரன் கட்சி வேட்பாளர் யார்? என அறிவிக்கப்பட்டு விடுவார்.

    அதன் பிறகே திருவாரூர் தொகுதியில் அ.தி.மு.க.- தி.மு.க. -அ.ம.மு.க. கட்சிகளின் மும்முனை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று வேட்பு மனுதாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    வேட்பு மனு தாக்கல் ஊர்வலம் குறித்து முன்னதாகவே உரிய முடிவு செய்து அனுமதி பெற வேண்டும். தேர்தல் அலுவலகம் முன்பு 200 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் முன்மொழிபவர் உள்பட 6 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இன்று தொடங்கும் வேட்பு மனு தாக்கல் முதல் நாளில், சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்புமனு வாபஸ் பெற வருகிற 14-ந்தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    அதன் பின்னரே அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். தொகுதி முழுவதும் தலைவர்கள், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இதன் பிறகு வாக்குப்பதிவு வருகிற ஜனவரி 28-ந்தேதி நடைபெறுகிறது. 31-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே அதாவது குறுகிய காலமே உள்ளதால் திருவாரூர் தொகுதியில் அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்ற தொடங்கி விட்டனர். #Tiruvarurconstituency #Tiruvarurbyelection
    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் திருவாரூர் தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு தொடங்கியுள்ளது. தேர்தல் பணிக்காக 2500 அரசு அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். #Tiruvarurbyelection
    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    திருவாரூர் தொகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பணிகள் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் திருவாரூர் தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு தொடங்கியுள்ளது. தேர்தல் பணிக்காக 2500 அரசு அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, இலவசமாக பொருட்கள் வழங்கப்படுகிறதா? என பறக்கும் படையினரும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    திருவாரூர் தொகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், லாட்ஜ்களையும் தீவிரமாக பறக்கும் படையினர் கண்காணித்து வருகிறார்கள். #Tiruvarurbyelection


    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிற தொண்டர்கள் நாளை கட்சி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. #ThiruvarurByElections #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-



    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிற தொண்டர்கள் 2-ந்தேதி (நாளை) காலை 9.30 மணி முதல் 3-ந்தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்தொகையான ரூ.25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை 4-ந்தேதி நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.   #ThiruvarurByElections #ADMK
    ×