search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tn dgp"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி விட்டது.
    • சண்முகம், ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம், கரிகாலன் உள்ளிட்ட மணல் ஒப்பந்ததாரர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை கடிதத்தில்,

    * சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    * அரசு அதிகாரிகளின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

    * மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி விட்டது.

    * 5 மாவட்டங்களில் சட்டவிரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டுள்ளது. மிக தெளிவான டிரோன், பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளோம்.

    * நான்கு ஒப்பந்த நிறுவனங்களை அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. ஒரு இடத்தில் 2 இயந்திரங்களை வைத்து மட்டுமே மணல் அள்ளுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் பல்வேறு இயந்திரங்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளது.

    * சண்முகம், ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம், கரிகாலன் உள்ளிட்ட மணல் ஒப்பந்ததாரர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

    * அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாதது ஒப்பந்ததாரர்கள் சொத்துக்களை வாங்கி குவித்ததையும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டி உள்ளது.

    * அனுமதிக்கப்பட்ட அளவை விட 23.64 லட்சம் யூனிட் கடந்த ஆண்டு மட்டும் அதிகம் அள்ளப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் முடியும் வரை நகர்ப்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்று டிஜிபிக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #parliamentelection #tndgp #maduraicourt
    சென்னை:

    தேர்தல் நெருங்குவதால் நகர் பகுதிகளில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என நாராயணன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 

    தேர்தல் முடியும் வரை நகர்ப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது.

    மைதானங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம் என தமிழக டிஜிபிக்கு  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #maduraicourt #parliamentelection #tndgp
    தமிழக டிஜிபியின் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கில், இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது. #DGPCase #HCMaduraiBench
    மதுரை:

    தமிழக டிஜிபி ராஜேந்திரன் பதவி நீட்டிப்புக்கு எதிராக, மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதின்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்துவிட்டு, டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளதாகவும், அவரது பணி நீட்டிப்பை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    குட்கா முறைகேடு தொடர்பாக, சிபிஐயின் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.



    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் போய் சேரவில்லை என்று கூறி, பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, டிஜிபி ராஜேந்திரன் பணி நீட்டிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    அதேசமயம், இவ்வழக்கில் டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் வரும் 29-ம் தேதிக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய  தினம், உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள். #DGPCase #HCMaduraiBench

    மசாஜ் சென்டரில் எப்போது, எந்த சூழ்நிலையில் போலீசார் சோதனை நடத்தலாம் என்ற வரையறை செய்து தமிழக டி.ஜி.பி., அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பினால் என்ன?’ என்று ஐகோர்ட் கேள்வியெழுப்பியுள்ளது.
    சென்னை:

    கோவையை சேர்ந்தவர் புஷ்பா. இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கோவையில், ‘ஸ்பா’ என்ற மசாஜ் சென்டர் நடத்தி வருகிறேன். இங்கு, கேரளாவின் பாரம்பரியமான ஆயுர்வேத சிகிச்சை அடிப்படையில் உடலுக்கு மசாஜ் செய்யப்படுகிறது. இதனால், உடலில் உள்ள பல நோய்கள் குணமடைகின்றன.

    ரத்த நாளங்கள் சரியாகி, ரத்த ஓட்டம் சீராகுகிறது. ஆனால், தேவையில்லாமல் போலீசார் இதுபோன்ற பாரம்பரியமான மசாஜ் சென்டரில் சோதனை நடத்துகின்றனர். 2014-ம் ஆண்டு மசாஜ் சென்டரில் தேவையில்லாமல், அடிப்படை முகாந்திரம் இல்லாமல், சோதனை நடத்தக்கூடாது என்று அப்போதைய ஐகோர்ட்டு நீதிபதி வி.ராம சுப்பிரமணியம் தீர்ப்பு அளித்தார்.

    எனவே, தேவையில்லாமல் மசாஜ் தொழிலில் தலையிடக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். பின்னர் நீதிபதி, ‘ஐகோர்ட்டு ஏற்கனவே 2 முறை உத்தரவிட்டுள்ளது.

    அந்த உத்தரவின் அடிப்படையில், மசாஜ் சென்டரில் எப்போது, எந்த சூழ்நிலையில் போலீசார் சோதனை நடத்தலாம் என்ற வரையறை செய்து தமிழக டி.ஜி.பி., அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக சிறப்பு அரசு பிளீடர் ஏ.பாலமுருகன் கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
    ×