search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Fishermens Arrest"

    • இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் 15 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • புதிதாக கைதான 4 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. அதனை தொடர்ந்த அவர்களை சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் 15 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 11 மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    11 மீனவர்கள் 2-வது முறையாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதால் சிறை தண்டனை விதிப்பதாகவும் புதிதாக கைதான 4 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்வதாகவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 25 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இனியும் தாமதிக்காமல் மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கும், அவர்களது படகுகளை மீட்பதற்கும் இந்திய வெளியுறவுத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 25 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இன்று கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகளில் மீன் பிடிப்பவர்கள் ஆவர். இதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். இனியும் தாமதிக்காமல் மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 27 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் கவலையை அளிக்கிறது.
    • மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளை விடுவித்திட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதி உள்ளார்.

    இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், இருவேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் கவலையை அளிக்கிறது.

    தொடர்ச்சியாக இது போன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே உடனடியாக தூதரக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

    ×