search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN secretariat"

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தற்போது துவங்கியது. #TNSecretariat #TNCM #Palaniswami
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் முடிவு தொடர்பாக தமிழக அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், தற்போது இந்த அமைச்சரவை கூட்டம் துவங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    மிகுந்த எதிர்ப்பார்ப்பு மற்றும் கோரிக்கைகளுக்கு மத்தியில் துவங்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் அந்த 7 பேரின் விடுதலை குறித்து எடுக்கப்படும் முடிவை அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். #TNSecretariat #TNCM #Palaniswami
    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #sterliteprotest #DMK
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று சபாநாயகர் தலைமையிலான பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணித்தனர்.

    மேலும், முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் பலர் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து முதல்வர் தரப்பிலிருந்து அனுமதி ஏதும் அளிக்கப்படாத நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை முன்பு அமர்ந்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காவல்துறையே காராணம் என திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டபடி தர்ணா செய்தனர்.

    இதேபோல, தலைமை செயலகத்திற்கு வெளியே திமுகவினர் சாலையை மறித்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

    இதனை அடுத்து, ஸ்டாலினை குண்டுக்கட்டாக தலைமை செயலகத்தில் இருந்து போலீசார் வெளியே தூக்கி வந்தனர். பின்னர், வெளியே வந்த ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சாலையில் அமர்ந்து மறியல் நடத்தினர்.

    சிறிது நேரத்திற்கு பின்னர், போலீசார் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். 



    முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின், சீருடை அணியாத காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது பற்றி விசாரணை தேவை என்றும், துப்பாக்கிச்சூடு பற்றி பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும், துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்காக டிஜிபியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    மேலும், 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டமே கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில், முதல்வர் பழனிசாமி நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூட கூறவில்லை என்றும், துப்பாக்கிச்சுடு பற்றி நடவடிக்கை எடுக்காமல் ஒப்புக்காக ஆட்சியர், எஸ்.பி., போன்றோரை மாற்றம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். #sterlilteprotest #DMK
    ×