search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato paneer"

    நாண், தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் தக்காளி பன்னீர். இன்று இந்த தக்காளி பன்னீரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - கால் கிலோ
    பச்சை மிளகாய் - 2
    தக்காளி - கால் கிலோ
    வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    தக்காளி கெட்சப் - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    சர்க்கரை - அரை தேக்கரண்டி



    செய்முறை :

    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளியை போட்டு வேக வைத்து எடுத்து அதன் தோலை நீக்கி மசித்து விடவும்.

    பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி வாணலியில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவேண்டும்.

    வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் மசித்த தக்காளி விழுதினை ஊற்றி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி கெட்சப், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.

    அதில் பொரித்து வைத்திருக்கும் பன்னீரை போட்டு ஒரு முறை பிரட்டி இறக்கவும்.

    சுவையான தக்காளி பன்னீர் ரெடி.

    தக்காளி கலவையை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. பன்னீரை அதிக தீயில் வறுக்கக் கூடாது

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×